தேசிய வாக்காளர் தின பேரணி! 

ye2501P1

சேலம் மாவட்டம், ஏற்காட்டில் தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு வருவாய் துறை சார்பில் வாக்காளர் விழிப்புணர்வு பேரணி நடைப்பெற்றது. பேரணி காலை 11 மணிக்கு ஏற்காடு நாசரேத் பள்ளியில் துவங்கி, ஏற்காடு டவுண், கடை வீதி, பஸ் நிலையம், அண்ணா பூங்கா, உள்ளிட்ட பகுதிகளை கடந்து ஒண்டிக்கடை அண்ணா சிலை அருகே நிறைவடைந்தது.

பேரணியில் ஏற்காடு வட்டாட்சியர் கிருஷ்ணன், வருவாய் ஆய்வாளர் கணேஷ், வி... பாஸ்கர் ஆனந்த், மற்றும் கிராம உதவியாளர்கள் கலந்து கொண்டனர். வாக்களிப்பது அனைவரின் கடமை, வாக்குரிமையை வீணாக்க கூடாது உள்ளிட்ட கோஷங்களை எழுப்பினர்.

 -நவீன் குமார்.