ஏற்காட்டில் முதன் முதலில் மருத்துவ ஆராய்சிக்காக உடல் தானம் செய்து உடல் ஒப்படைக்கும் நிகழ்வு நடைபெற்றது.
ஏற்காடு டவுண் பகுதியை சேர்ந்த அறிவியல் எழுத்தர் இளங்கோவின் தந்தை சண்முகம் தனது உடலை தானம் செய்திருந்தார். இந்நிலையில் இவர் இன்று அதிகாலை இறந்துவிட்டார்.
இவரது உடலை சேலம் அரசு மருத்துவ கல்லூரி மாணவர்களின் பயிற்சி மற்றும் ஆராய்சிக்கு ஒப்படைக்கும் நிகழ்வு நடைப்பெற்றது. இவ்வாறு உடல் தானம் செய்யும் நிகழ்வு ஏற்காடு தாலுக்காவில் முதன் முதலாக நடைப்பெற்றது.
பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், இவரது உடலை அவரது இல்லத்தில் இருந்து ஏற்காடு பஸ் நிலையம் வரை ஊர்வலமாக எடுத்து வந்து, சேலம் அரசு மருத்துவ கல்லூரியினரிடம் ஒப்படைத்தனர்.
இந்நிகழ்சியில் ஏற்காடு பகுதியை சேர்ந்த பொதுமக்கள், பல்வேறு கட்சியினர், மற்றும் சமூக ஆர்வலர்கள் கலந்து கொண்டனர்.
-நவீன் குமார்.