கால தாமதமாக திறக்கப்பட்ட இந்தியன் வங்கி! -காத்திருந்த பொது மக்கள்!  

ye0802P3

ஏற்காடு பஸ் நிலையத்தில் இந்தியின் வங்கியின் ஏற்காடு கிளை உள்ளது. தினசரி மாலை வங்கி பணி நேரம் முடிவடைந்த பின்னர் வங்கியை பூட்டி சாவியை வங்கியின் கிளை மேலாளர் எடுத்து செல்வது வழக்கம். அவரே மறுநாள் காலை 10 மணிக்கு முன்னர் வந்து வங்கியை திறப்பார்.

ஆனால், இன்று காலை 10.30 மணியாகியும் வங்கி மேலாளர் வராமல் வங்கி திறக்கப்படவில்லை. வங்கி ஊழியர்களும் மேலாளருக்கு போன் செய்தும் அவர் போன் எடுக்காததால் அதிர்சியடைந்து அவர் தங்கியுள்ள இடத்திற்கு சென்று வங்கி சாவியை வாங்கி வந்து வங்கியை தாமதமாக 10.40 மணிக்கு திறந்தனர். இதனால் வங்கிக்கு வெளியே பொதுமக்கள் காத்திருந்தனர்.

 -நவீன் குமார்.