ஏற்காடு, கொம்பு தூக்கி மாண்ட்போர்ட் பள்ளியில் என்.எஸ்.எஸ். மற்றும் என்.சி.சி. முகாம் நிறைவு விழா நடைப்பெற்றது.
ஏற்காடு வட்டம், கொம்புதூக்கி கிராமத்தில் இயங்கி வரும் மாண்ட்போர்ட் சமுதாய பள்ளியில் நாட்டு நலப்பணி திட்ட முகாமானது கடந்த ஏழு நாட்களாக நடைப்பெற்றது.
இம்முகாமின் சிறப்பு நிகழ்வாக இன்று நாட்டு நலப்பணி திட்ட மாணவர்களும், தேசிய மாணவர் படை மாணவர்களும் ஏற்காட்டின் சுற்றுலா இடங்களான பக்கோடா பாயிண்ட், சேர்வராயன் கோவில், ஏற்காடு பூங்கா மற்றும் ஏற்காடு பஸ் நிலைய பகுதிகளில் இருந்த குப்பை மற்றும் கழிவுகளை சேகரித்து லாரிகளில் எடுத்து சென்று அப்பறப்படுத்தினர்.
இம்முகாமின் நிறைவு விழா பள்ளி வளாகத்தில் இன்று மாலை நடைப்பெற்றது. விழாவில் மாண்ட்போர்ட் சபையின் தென் மண்டல தலைவர் சகோதரர் கே.ஜே.ஜார்ஜ், மற்றும் சகோதரர் அந்தோணி முகாமில் கலந்து கொண்ட மாணவர்களை வெகுவாக பாராட்டினர்.
மாணவர்களின் மத்தியில் கே.ஜே.ஜார்ஜ் பேசியதாவது:
பள்ளியில் அளிக்கும் பயிற்சி முகாமானது, நம் நாட்டின் முன்னேற்றத்திற்கு அடித்தளமாக அமைந்துள்ளது. இத்தகைய நற்பண்புகளை வாழ்வின் அனைத்து தருணங்களிலும் நிலை நாட்டுதல் வேண்டும். பள்ளியில் கற்பதினால் மட்டும் கல்வி முழுமையடையாது. இது போன்ற நற்செயல்களை கற்பதன் மூலம்தான் கல்வி முழுமையடையும் என்றார்.
முகாமினை பள்ளியின் என்.சி.சி. அலுவலர் இருதய செல்வம் மற்றும் என்.எஸ்.எஸ். திட்ட அலுவலர் ஜெயந்த் ஆகியோர் வழிநடத்தினர்.
-நவீன் குமார்.