வெகு நாட்களாக பேருந்து வசதி இல்லாமல் இருந்த ஏற்காடு, சொரக்காப்பாட்டி கிராமத்திற்கு பேருந்து போக்குவரத்து இன்று துவக்கப்பட்டது.
இதனால் பள்ளி குழந்தைகள் 150 பேர் பயனடைவதுடன், இதுவரை பேருந்து வசதி இல்லாமல் இருந்த கீழ்கொளகூர், மேல் கொளகூர், கரடியூர், வேப்பாடி, தாலுக்காடு, புலியமத்தூர், சொரக்காபட்டி போன்ற கிராம மக்கள் பயனடைவார்கள். இந்த கிராமங்கள் எற்காட்டில் இருந்து சுமார் 18 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது.
புதிய பேருந்து வசதியைஏற்காடு எம்.எல்.ஏ சரோஜா துவக்கி வைத்தார். அப்போது ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் அண்ணாதுரை, ஏற்காடு ஊராட்சி மன்ற தலைவர் முரளி, ஒன்றிய குழு துணை தலைவர் சுரேஸ்குமார், ஒன்றிய துணை செயலாளர் ஆறுமுகம் ஆகியோர் உடன் இருந்தனர்.
-நவீன் குமார்.