ரெயில்வே பட்ஜெட் வரும் 25-ந் தேதி பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படுகிறது. பட்ஜெட் தயாரிப்புக்கான பணிகளில் ரெயில்வே அமைச்சகம் தீவிரமாக ஈடுபட்டு வரும் நிலையில், தமிழகத்தில் செயல்படுத்தப்பட வேண்டிய ரெயில்வே திட்டங்கள் தொடர்பாக தமிழக முதலமைச்சர் ஜெ.ஜெயலலிதா இன்று பிரதமர் நரேந்திர மோதிக்கு கடிதம் எழுதியுள்ளார்.
இந்தியாவில் தமிழ்நாடு முன்னணி தொழில் வளர்ச்சி பெற்ற மாநிலமாக திகழ்கிறது. இங்கு வேகமான தொழில் வளர்ச்சியை உருவாக்கிட உலகத்தர அடிப்படை கட்டுமான பணிகளை ஏற்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
ஏற்கனவே உள்ள அடிப்படை கட்டுமான வசதிகளை உலகத்தரம் வாய்ந்த வகையில் மேம்படுத்துவதற்காக ‘தமிழ்நாடு-2023′ என்ற தொலைநோக்கு திட்டத்தை நான் உருவாக்கி இருக்கிறேன். இதற்கு ரெயில் போக்குவரத்து வசதி மிக முக்கிய பங்களிப்பாக இருக்கும். இதன் மூலம் சமூக பொருளாதாரத்தில் ஒருங்கிணைந்த வளர்ச்சியை மாநிலம் அடையும்.
2016-17 ரெயில்வே பட்ஜெட் விரைவில் தாக்கல் செய்யப்படுகிறது. அதில் தமிழ்நாட்டிற்கு உதவும் வகையில் சில திட்டங்களை எங்களுக்கு சாதகமாக அறிவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.
தமிழ்நாடு-2023 திட்டத்தில் 10 முக்கிய ரெயில்வே திட் டங்கள் சேர்க்கப்பட்டு உள்ளது. இந்த திட்டங்களை தமிழ்நாட்டின் அடிப்படை கட்டுமான வசதிக்கு மிக உதவியானவையான இருக்கும். இந்த 10 திட்டங்கள் சென்னை–கன்னியாகுமரி இரட்டை வழிப்பாதை, ஸ்ரீபெரும்புதூர்–கிண்டி சரக்கு ரெயில் பாதை, சென்னை–தூத்துக்குடி சரக்கு ரெயில் பாதை, சென்னை – மதுரை– கன்னியாகுமரி அதிவிரைவு பயணிகள் ரெயில் பாதை, மதுரை–கோவை அதிவேக பயணிகள் ரெயில் பாதை, கோவை–சென்னை அதிவேக பயணிகள் ரெயில் பாதை, சென்னை–பெங்களூர் அதிவேக பயணிகள் ரெயில் பாதை, சென்னை –பெங்களூர் சரக்கு ரெயில் பாதை, ஆவடி–கூடுவாஞ்சேரி இணைப்பு ரெயில் பாதை, ஆவடி – திருவள்ளூர் – எண்ணூர் துறைமுகம் இணைப்பு பாதை ஆகியவை ஆகும்.
மேலும், தமிழக அரசு சென்னை–தூத்துக்குடி சரக்கு ரெயில் பாதை, சென்னை– மதுரை – கன்னியாகுமரி அதிவேக பயணிகள் ரெயில் பாதை, மதுரை – கோவை அதிவேக பயணிகள் ரெயில் பாதை ஆகிய 3 சிறப்பு திட்டங்களுக்கு முன்னுரிமை கொடுத்து செயல்படுகிறது.
மாநில அரசும், மத்திய ரெயில்வே துறையும் இணைந்து செயல்படுத்தும் சிறப்பு பயன்பாட்டு இந்த திட்டங்களின் படி ரெயில்வே அமைச்சகத்துடன் புதிய புரிந்துணர்வு ஒப்பந்தத்தை ஏற்படுத்திக் கொள்ள நாங்கள் ஏற்கனவே விரும்பம் தெரிவித்து உள்ளோம்.
இதில் மதுரை– தூத்துக்குடி தொழில் பாதையும் அடங்கும். இதற்கு சில நிபந்தனைகளை நாங்கள் கொடுத்துள்ளோம். இதன்படி இதற்காக எடுக்கப்படும் நிலத்திற்கு உரிய மதிப்பை மார்க்கெட் அடிப்படையில் வழங்க வேண்டும். மேலும், இதற்கு சமமான நிலத்தை பணமாக அல்லது நிலமாக ரெயில்வே துறை மற்றும் மத்திய அரசின் நிலங்களை வழங்க வேண்டும்.
இந்த திட்டங்கள் தாமதம் இல்லாமல் செயல்படுத்தவும், நிதி உதவிகளை குறைவில்லாமல் வழங்கி வேகமாக செயல்படுத்தவும், இருதரப்பினரையும் பங்களிப்பு செய்து உரிய காலத்தில் முடிக்க உத்தரவாதம் வழங்க வேண்டும். இந்த திட்டத்திற்கு மாநில அரசு உரிய பங்களிப்பை வழங்குவது ஆகியவை இதில் வற்புறுத்தப்பட்டு உள்ளன.
இந்த புரிந்துணர்வு வரைவு அறிக்கைக்கு மத்திய ரெயில்வே துறையில் இருந்து சரியான பதில் வரவில்லை. அதை ஆய்வு செய்து ஏற்றுக்கொள்ள உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இது சம்பந்தமாக தாங்கள் ரெயில்வே துறையின் அதிகாரிகளுக்கு உரிய உத்தரவுகளை பிறப்பித்து புரிந்துணர்வு ஒப்பந்தம் ஏற்பட உதவ வேண்டும்.
மேலும், சில திட்டங்கள் தொடர்பாக உங்கள் கவனத்திற்கு கொண்டு வருகிறேன். இதற்கு முந்தைய பட்ஜெட்டுகளில் தமிழ்நாட்டுக்கு பல்வேறு ரெயில்வே திட்டங்கள் அறிவிக்கப்பட்டன.
ஆனால், போதிய நிதி ஒதுக்கப்படவில்லை. இதற்கு போதிய நிதியை ஒதுக்கி பயணிகளின் எதிர் பார்ப்பை நிறைவேற்ற வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறேன்.
பட்ஜெட்டில் அறிவித்த திட்டங்கள் அனைத்தையும் விரைவில் நிறைவேற்ற உரிய நிதியை ஒதுக்க வேண்டும்.
மேலும், தமிழக மக்களின் நீண்டகால எதிர்பார்ப்பாக உள்ள கீழ்க்கண்ட ரெயில்வே திட்டங்களையும் நிறைவேற்ற உத்தரவாதம் அளிப்பீர்கள் என்று எதிர்பார்க்கிறேன்.
இந்த திட்டங்கள் எல்லாம் ஏற்கனவே பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டவை ஆகும். ஆனால், அதற்கான பணிகள் தொடங்கப்படாமல் உள்ளது.
இந்த திட்டங்கள் வருமாறு:-
1. மொரப்பூர்–தர்மபுரி புதிய வழிப்பாதை.
2. சென்னை– வில்லி வாக்கம் 5-வது, 6-வது பாதை, வில்லிவாக்கம் –காட்பாடி பிரிவின் புதிய பாதை.
3. அரியலூர் வழியாக சிதம்பரம்–ஆத்தூர் புதிய ரெயில் பாதை.
4. திண்டிவனம் –கன்னி யாகுமரி இரட்டை வழிப் பாதை.
5. போடி நாயக்கனூர் – கோட்டயம் புதிய பாதை.
6. ரேணிகுண்டா – அரக் கோணம் இரட்டை வழிப் பாதை.
7. கும்மிடிப்பூண்டி – அத்திப்பட்டு 3-வது, 4-வது பாதை.
8. கிருஷ்ணகிரி வழியாக ஜோலார்பேட்டை–ஓசூர் புதிய வழிப்பாதை.
9. மயிலாடுதுறை – திக்கடையூர்–தரங்கம்பாடி–திருநள்ளாறு–காரைக்கால் புதிய வழிப்பாதை.
10. தூத்துக்குடி திருச் செந்தூர் வழியாக ராமநாத புரம்–கன்னியாகுமரி புதிய வழிப்பாதை.
11. ராமநாதபுரம் வழியாக தூத்துக்குடி–காரைக்குடி புதிய பாதை.
12. சீர்காழி–காரைக்கால் புதிய பாதை.
13. பெரம்பலூர் – அரிய லூர் வழியாக காரைக் கால்– சேலம், (நாமக்கல்) புதிய பாதை.
14. நாகர்கோவில் வழி யாகதிருவனந்தபுரம் – கன்னி யாகுமரி இரட்டை வழிப் பாதை.
15. மதுரை – போடி நாயக் கனூர் அகல ரெயில்பாதை திட்டம். போடிநாயக்கனூர் – எர்ணா குளம் புதிய பாதை.
16. போடி, தேனி வழியாக திண்டுக்கல் – குமுளி புதிய பாதை.
17. திருநெல்வேலி, நாகர் கோவில் வழியான கன்னியாகுமரி இரட்டைப் பாதை மற்றும் மின் பாதை.
18. சைதாப்பேட்டை வழியாக சென்னை– ஸ்ரீபெரும்புதூர் புதியஅகல ரெயில் பாதை.
19. தஞ்சாவூர்–அரியலூர் புதிய ரெயில் பாதை.
20. மேலூர் வழியாக மதுரை–காரைக்குடி புதிய பாதை.
மேற்கண்ட திட்டங்களை நிறைவேற்ற உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
இவ்வாறு தமிழக முதலமைச்சர் ஜெ.ஜெயலலிதா தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
-டாக்டர்.துரைபெஞ்சமின்.
ullatchithagaval@gmail.com