ஏற்காடு பஸ் நிலையத்தில் இன்று (11.02.2016) மாலை பட்டிப்பாடி கிராமத்திற்கு செல்வதற்காக பள்ளி மாணவ, மாணவிகள் மற்றும் பொது மக்கள் காத்திருந்தனர். அப்போது பட்டிப்பாடி செல்லும் அரசு பஸ், பஸ் நிலையத்திற்குள் நுழையும்போது பஸ்சில் இடம் பிடிக்க அனைவரும் ஓடினர்.
அப்போது பேருந்தின் பின்சக்கரம் பட்டிப்பாடி கிராமத்தை சேர்ந்த தமிழ் செல்வன் மகன் அன்பு செல்வன் கால் மீது ஏறியது. அவன் அலறி துடித்தான். உடனடியாக பஸ் நிறுத்தப்பட்டு அன்பு செல்வனுக்கு முதலுதவிகள் அளித்தனர். அதிர்ஷ்டவசமாக சிறு காயங்களுடன் அவன் உயிர் தப்பினான்.
பள்ளி மாணவ, மாணவிகள் பஸ் நிலையத்தில் உள்ள சமயத்தில் காலை மற்றும் மாலை நேரங்களில் பல்வேறு விபத்துகள் ஏற்படுகின்றன.
எனவே, அந்த சமயத்தில் பஸ் நிலையத்தில் காவல் துறையினர் ரோந்து பணியில் ஈடுபட வேண்டும் என பஸ் நிலையத்தில் இருந்த மக்கள் கூறினர்.
-நவீன் குமார்.