தி.மு.க.வுடன்- காங்கிரஸ் கூட்டணி: குலாம் நபி ஆசாத் தகவல்!

KULAMKULAM3KULAM.2KULAMNABI MEET MK1KULAM.jpg1KULAMNABI MEET MK

தமிழக சட்டப்பேரவை தேர்தல் கூட்டணி தொடர்பாக,  காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய பொதுச்செயலாளர் குலாம் நபி ஆசாத், தமிழக காங்கிரஸ் கட்சியின் மேலிட பொறுப்பாளர் முகுல்வாஸ்னிக், தமிழக காங்கிரஸ் கட்சித் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் ஆகியோர், தி.மு.க. தலைவர் மு.கருணாநிதியை, சென்னை, கோபாலபுரம் இல்லத்தில் இன்று சந்தித்து பேசினர்.

இந்த சந்திப்புக்கு பின் பேசிய குலாம் நபி ஆசாத், தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் தி.மு.க.வுடன் காங்கிரஸ் கூட்டணி அமைத்துள்ளது என்றும், வேறு கட்சிகளுடன் கூட்டணி அமைப்பது குறித்து தி.மு.க. முடிவு செய்யும் என்றும், தமிழக சட்டப்பேரவை தேர்தலில் தி.மு.க. கூட்டணி வெற்றி பெற்றால், ஆட்சியில் பங்கேற்பது குறித்து பின்னர் முடிவு செய்யப்படும் என்றும் தெரிவித்தார்.

ஈழப் பிரச்சனையில் காங்கிரஸ் எங்களை வஞ்சித்து விட்டது எனக் கூறி, காங்கிரஸ் கூட்டணியை விட்டு வெளியேறிய தி.மு.க. தலைவர் மு.கருணாநிதி, இப்போது மறுபடியும் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி சேர்ந்துள்ளார். இதுதான் தி.மு.க. தலைவர் மு.கருணாநிதியின் தமிழினப் பற்று.

டாக்டர்.துரைபெஞ்சமின்.

ullatchithagaval@gmail.com