ஏற்காடு, கோவிலூர் கிராமத்திற்கு தார்சாலை அமைத்து தர வேண்டி கிராம மக்கள் கண்டன ஆர்பாட்டம் நடத்தினர்.
ஏற்காடு தாலுக்கா மாரமங்களம் பஞ்சாயத்திற்குட்பட்ட மேல் கோவிலூர் மற்றும் தாழ் கோவிலூர் கிராமங்கள் ஏற்காடு டவுண் பகுதியில் இருந்து 17 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது.
இந்த கிராமங்களுக்கு சாலை வசதி இல்லை. எனவே, இதனால் இவர்கள் சந்திக்கும் பிரச்சனைகளை விளக்கியும், வரும் சட்டசபை தேர்தலில் வாக்களிக்க மாட்டோம் என எச்சரிக்கை போஸ்டர்களை கடந்த 8 ஆம் தேதி ஏற்காடு பகுதிகளில் ஒட்டியிருந்தனர்.
இன்று தங்கள் கிராமங்களுக்கு தார் சாலை அமைத்து தர வேண்டி ஏற்காடு, அண்ணா சிலை அருகில் கண்டன ஆர்பாட்டம் நடத்தினர். ஆர்பாட்டத்திற்கு அகில இந்திய விவசாயிகள் மகாசபை ஏற்காடு அமைப்பாளர் கோபி தலைமை ஏற்றார். ஆர்பாட்டத்தில் தாழ்கோவிலூர் மற்றும் மேல்கோவிலூர் கிராமங்களில் இருந்து 85-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
-நவீன் குமார்.