சாலை அமைக்கும் முன்னரே பில் தொகை வழங்கப்பட்டதை கண்டித்து பொதுமக்கள் முற்றுகை!

ye1802P2 (1)ஏற்காட்டில் சாலை அமைக்கும் பணி நடைபெறுவதற்கு முன்னரே அதற்கான பில் தொகை வழங்கப்பட்டதை கண்டித்து ஏற்காடு பி.டி.ஓ-வை கிராம மக்கள் முற்றுகையிட்டனர்.

ஏற்காட்டில் மஞ்சக்குட்டை கிராமத்திற்குட்பட்ட மதுரையான்காடு கிராமம். இங்கு 300 –க்கும் மேற்பட்ட பொது மக்கள் பூர்வீகமாக வசித்து வருகின்றனர். இந்த கிராமத்திற்கு இது வரை சாலை வசதி கிடையாது. பொதுமக்கள் ஒத்தையடி பாதையை பயன்படுத்தி வந்துள்ளனர்

இந்த கிராமத்திற்கு சாலைப்பாறை பிரிவில் இருந்து 1/2 கிலோ மீட்டர் தொலைவிற்கு மண்சாலை அமைப்பதற்கு கடந்த நான்கு மாதத்திற்கு முன்னரே டெண்டர் விடப்பட்டு முருகன் எனும் காண்ட்ராக்டருக்கு ரூ.8 இலட்சம் மதிப்பிலான பணி ஒப்படைக்கப்பட்டது.

புதிய சாலை அமைப்பதற்காக மண்கொட்டப்பட்டதுசாலையோர தடுப்பு கட்டப்படாததால் கொட்டப்பட்ட மண் சரிந்து அருகில் இருந்த காப்பி எஸ்டேட்களில் வீணாக குவிந்தது.

அதன் பின்னர் சாலை பணி நடைபெறாமல் இருந்தது. பொதுமக்களும் இந்த அபாயகரமான சாலையையே பயன்படுத்தி வந்தனர். இவ்வாறு பணி நடைபெறுவதற்கு முன்னரே அப்பணிக்கு ஒதுக்கப்பட்ட பில் தொகையான ரூ.8 இலட்சம் காண்ட்ராக்டருக்கு வழங்கப்பட்டது

இதனால் இன்று காலை ஏற்காடு பி.டி.. அலுவலகத்திற்கு வந்த மதுரையான்காடு கிராம மக்கள் தங்கள் கிராமத்திற்கு சாலை அமைக்கும் பணி பாதியில் நிறுத்தப்பட்டது குறித்தும்பணி நிறைவுறும் முன்னரே, பில் தொகை வழங்கப்பட்டது குறித்தும் கேட்டு முற்றுகையிட்டு ஏற்காடு பி.டி.. ஜெயராமனிடம் ஆக்ரோஷமாக வாக்குவாதம் செய்தனர்.

பின்னர் பணி நடைப்பெற்று வந்த இடத்திற்கு ஏற்காடு பி.டி.. ஜெயராமன், ஏற்காடு சேர்மேன் அண்ணாதுரை ஆகியோர் சென்று ஆய்வு செய்து, சாலை பணியை விரைவில் முடித்து தருவதாக வாக்குறுதி அளித்தனர். இதனால் சமாதானம் அடைந்த பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

 -நவீன் குமார்.