தமிழக பால்வளத்துறை அமைச்சர் பி.வி.ரமணா ஒரு பெண்ணுடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படம் சமூக வலைதளமான வாட்ஸ்அப் மற்றும் ஃபேஸ்புக்கில் பரவி வருகிறது. இந்த புகைப்படம் தொடர்பாக பல சர்ச்சைகள் சமூக வலைதளத்தில் நிலவி வருகிறது.
அமைச்சர் பி.வி.ரமணாவுடன் நெருக்கமாக இருக்கும் பெண் அவரது துணைவியார் லதா என்பது எமது விசாரணையில் தெரியவருகிறது.
தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், அ.இ.அ.தி.மு.க-வில் வேட்பாளர் பட்டியல் வெளிவரவிருக்கும் சூழ்நிலையில், எப்படியாவது அமைச்சர் பி.வி.ரமணாவை அரசியலில் இருந்து அப்புறப்படுத்திவிட வேண்டும் என்ற கெட்ட நோக்கத்தோடு, அவரது அரசியல் எதிரிகள் இந்த புகைப்படங்களை சமூக வலைதளங்களில் அரங்கேற்றியுள்ளார்கள்.
லதா தனது துணைவியார் என்பதை கடந்த 2011 ஆண்டு திருவள்ளுர் சட்டமன்ற தொகுதியில் வேட்பாளராக போட்டியிட்டபோதே வேட்புமனு உறுதிமொழி பத்திரத்தில் தேர்தல் ஆணையத்திற்கு பி.வி.ரமணா தெளிவாக தெரிவித்துள்ளார்.
இதோ அதற்கான ஆதாரம்:
உண்மை இவ்வாறு இருக்க, அமைச்சர் பி.வி.ரமணாவுடன் புகைப்படத்தில் நெருக்கமாக இருக்கும் பெண் யார் என்று தெரியாமலே, கோடிக்கணக்கானோர் பார்வையிடும் சமூக வலைதளங்களில் ஆபாசமான முறையில் விமர்சனம் செய்வது எந்த வகையில் நியாயம்?
அன்பான வாசகர்களே! இன்றைக்கு அமைச்சர் பி.வி.ரமணாவுக்கு ஏற்பட்ட இதே நிலைமை நாளைக்கு உங்களுக்கும் ஏற்படக்கூடும். எனவே, எச்சரிக்கையாக இருங்கள். உங்கள் வீட்டு படுக்கை அறை, குளியல் அறை மற்றும் கழிப்பறைகளில் அடையாளம் தெரியாத நபர்களை எக்காரணத்தைக் முன்னிட்டும் அனுமதிக்காதீர்கள். ஏனென்றால், எந்த இடத்தில் ரகசிய கேமராக்களை யார் பொருத்துவார்கள் என்பது யாருக்கும் தெரியாது.
-டாக்டர்.துரைபெஞ்சமின்.
ullatchithagaval@gmail.com