புதிய தார் சாலை பயன்பாட்டை ஏற்காடு எம்.எல்.ஏ. துவங்கி வைத்தார்!

ye2102P2

ஏற்காட்டில் புதிய தார்சாலை அமைக்க பூஜை போடப்பட்டது. மேலும் அமைக்கப்பட்ட புதிய தார் சாலை பயன்பாட்டை ஏற்காடு எம்.எல்.ஏ துவங்கி வைத்தார்.

ஏற்காட்டில் இருந்து குண்டூர் கிராமத்திற்கு கடந்த 2 வருடமாக தார் சாலை அமைக்கப்படும் பணி நடைப்பெற்று வந்தது. இந்த பணி நிறைவடைந்த நிலையில் ஏற்காடு எம்.எல்.ஏ சரோஜா இந்த சாலை பயன்பாட்டை துவக்கி வைத்தார்.

பின்னர் ஏற்காடு தாலுக்கா, வேலூர் பஞ்சாயத்திற்குட்பட்ட கொண்டையனூர் கிராமத்திற்கு புதிய தார் சாலை அமைக்கும் பணிக்கு பூஜை போடப்பட்டது. ஏற்காடு எம்.எல்.ஏ. சரோஜா பணியை துவக்கி வைத்தார்.

இந்நிகழ்சிகளில் ஏற்காடு சேர்மேன் அண்ணாதுரை, துணை சேர்மேன் சுரேஷ்குமார், முரளி, ஆறுமுகம், மனோ, குமார், புகழேந்தி, பாலு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

 -நவீன் குமார்.