ஏற்காட்டில் அட்மா திட்டம் மூலம் இராகி பயிரில் தரமான விதை உற்பத்தி பயிற்சி அளிக்கப்பட்டது. ஏற்காடு வட்டாரம் வேளாண்மை துறை மூலம் அட்மா திட்டத்தின் கீழ் மேலூர் கிராமத்தில் இராகி வயலில் தரமான விதை உற்பத்தி பயிற்சி அளிக்கப்பட்டது.
இப்பயிற்சிக்கு வேளாண் உதவி இயக்குனர் பாரதிநாதன் தலைமையேற்று சிறுதாணியங்களில் விதை பண்ணை பதிவு செய்தல், விதை உற்பத்திக்கான தக்க பருவம், பயன்கள், விதை சான்றளிப்பு மற்றும் முக்கியதுவம் பற்றியும் வேளாண்மை துறையில் செயல்படுத்தும் திட்டங்கள் பற்றியும் தெரிவித்தார்.
அட்மா வட்டார மேலாளர் கந்தசாமி விதையளவு, விதை நேர்த்தி, விதைப்பு, நாற்றங்கால் நிர்வாகம், நடவு, களை, மற்றும் உர நிர்வாகம் ஆகிய தொழில் நுட்பங்கள் பற்றி தெரிவித்தார்.
உதவி வேளாண்மை அலுவலர் பரமசிவம் மண்பரிசோதனைக்கு மண் மாதிரி எடுக்கும் தொழில்நுட்பங்களை தெரிவித்தார். இப்பயிற்சியில் மேலூர் கிராமத்தை சேர்ந்த 30-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்துகொண்டனர்.
-நவீன் குமார்.