அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச் செயலாளரும், தமிழ்நாடு முதலமைச்சருமான ஜெ.ஜெயலலிதாவை இன்று (25.2.2016) தே.மு.தி.க-வைச் சேர்ந்த முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்களான மதுரை மையம் தொகுதி ஆர். சுந்தர்ராஜன், திட்டக்குடி தொகுதி கே.தமிழ்அழகன், பேராவூரணி தொகுதி நடிகர் சி. அருண்பாண்டியன், ராதாபுரம் தொகுதி மைக்கேல் எஸ். ராயப்பன், செங்கம் தொகுதி சுரேஷ்குமார், சேந்தமங்கலம் தொகுதி சாந்தி ராஜமாணிக்கம், விருதுநகர் தொகுதி க. பாண்டியராஜன், திருத்தணி தொகுதி மு. அருண் சுப்பிரமணியம் ஆகியோரும், பாட்டாளி மக்கள் கட்சியைச் சேர்ந்த அணைக்கட்டு தொகுதி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் மா.கலையரசு, புதிய தமிழகம் கட்சியைச் சேர்ந்த நிலக்கோட்டை தொகுதி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் A.ராமசாமி ஆகியோரும் நேரில் சந்தித்து தங்களை அ.தி.மு.க.வில் அடிப்படை உறுப்பினர்களாக இணைத்துக் கொண்டனர்.
-எஸ்.திவ்யா.