ஏற்காட்டில் எம்.ஜி.ஆர். கலையரங்க திடல் திறக்கப்பட்டது.
ஏற்காடு டவுண் பகுதியில் ஏற்காடு யூனியன் நிதியில் மேடை கட்டப்பட்டது. இந்த மேடைக்கு ‘எம்.ஜி.ஆர். கலையரங்க திடல்’ என்று பெயரிட்டு ஏற்காடு எம்.எல்.ஏ சரோஜா குத்துவிளக்கு ஏற்றி திறந்து வைத்தார். பின்னர் தமிழக முதல்வர் ஜெ.ஜெயலலிதா பிறந்தநாள் பொதுக்கூட்டமும் அதே மேடையில் நடைப்பெற்றது.
கூட்டத்திற்கு ஏற்காடு யூனியன் சேர்மேன் அண்ணா துரை தலைமை தாங்கினார். ஏற்காடு எம்.எல்.ஏ சரோஜா சிறப்புரை ஆற்றினார். இந்நிகழ்சியில் யூனியன் துணை சேர்மேன் சுரேஷ் குமார் மற்றும் புகழேந்தி, பாலு, ரவிச்சந்திரன், அன்பு, மனோ, குமார், விஜய், முருகன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
-நவீன் குமார்.