ஏற்காடு தாலுக்காவில் உள்ள 67 கிராமங்களுக்கும் ஒரு அரசு மருத்துவமனை ஏற்காடு டவுண் பகுதியில் உள்ளது. ஏற்காடு தாலுக்காவின் அனைத்து மக்களும் தங்கள் மருத்துவ தேவைக்கு இங்குதான் வந்து செல்கின்றனர். இங்கு பல உள்நோயாளிகள் தங்கியும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
ஆனால், இங்குள்ள மருத்துவ உபகரணங்கள் மற்றும் மருத்துவமனையின் அனைத்து பகுதிகளும் சுத்தமில்லாமல் சுகாதார சீர்கேடைந்து உள்ளது. இங்கு நோயாளிகள் குடிப்பதற்கு கூட தூய்மையான குடிநீர் கிடையாது. மேலும், பிரசவம் ஆகி உடல்நல குறைவுடன் பிறக்கும் குழந்தைகளை வைக்கும் இன்குப்பேட்டர் பெட்டி மிகவும் அழுக்கு படிந்து அசுத்தமாக உள்ளது.
மருத்துவமனையின் கழிப்பறை உட்பட அனைத்து பகுதிகளிலும் கழிவுகள் தேங்கி நிற்கின்றது. இங்கு மருத்துவர்களும் சரியானபடி மருத்துவமனைக்கு வருவது கிடையாது. சுகாதாரப்பணியாளர்களும் மருத்துவமனையை சுத்தம் செய்வதும் கிடையாது. மேலும், பெரும்பாலும் இங்கு வரும் நோயாளிகளை சிறு காயம் என்றாலும் சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி விடுவதாக குற்றச்சாட்டப்படுகிறது.
எனவே, தமிழக முதலமைச்சர் தனிக்கவனம் செலுத்தினால் மட்டும்தான் இப்பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு கிடைக்கும்.
-நவீன் குமார்.