தார் சாலை அமைத்து தராவிட்டால் தேர்தலை புறக்கணிப்போம்! -ஏற்காட்டில் 18 கிராம மக்கள் எச்சரிக்கை!

ye0203P2 ye0203P1final ye0203P3

சேலம் மாவட்டம், ஏற்காட்டிற்கு உட்பட்ட மாரமங்கலம் பஞ்சாயத்தில் கொட்டச்சேடு கிராமம் முதல் செந்திட்டு கிராமம் வரை 3 கிலோ மீட்டர் தொலைவிற்கு கரடு முரடான மண் பாதை உள்ளது. இந்த பாதையினால் செந்திட்டு, காளிக்காடு, அரங்கம், பெலாக்காடு, சின்ன மதூர், பெரிய மதூர், சின்ன வீட்டு களம், பெரிய வீட்டு களம், கேழையூர், இரங்காடு, கோழிக்கல், சுண்டக்காடு, குட்டமாத்திக்காடுமாவுத்து, கொம்புதூக்கி, கூத்துமுத்தல், சின்னேரிக்காடு, பாரக்காடு உள்ளிட்ட கிராம மக்கள் பயன்பெற்று வருகின்றனர்.

இந்த பாதை அங்குள் தனியார் எஸ்டேட்களின் கட்டுப்பாட்டில் இருந்து வந்தது. கிராம மக்கள் நீதிமன்றத்தில் முறையிட்டு, கடந்த ஆண்டு வருவாய் துறை மூலம் ஆக்கிரமிப்பை அகற்றி பாதையை மீட்டனர்.

கடந்த ஓராண்டு காலத்திற்கு மேலாக இந்த மண்பாதையை சீரமைத்து தார் சாலை அமைத்து தரக்கோரி  சேலம் மாவட்ட ஆட்சியரிடம் பல முறை மனு அளித்துள்ளனர்.

ஆனால், எவ்வித நடவடிக்கையும் இல்லாததால்இன்று காலை 5000-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் தாங்களே மண்பாதையை சீரமைக்க துவங்கினர்.

இத்தகவல் அறிந்து, சேலம் புறநகர் .எஸ்.பி. சுர்ஜித் குமார்சங்ககிரி டி.எஸ்.பி. கந்தசாமி, ஏற்காடு காவல் ஆய்வாளர் குமரன் ஆகியோர் தலைமையிலான காவல்துறையினரும், ஏற்காடு சமூக பாதுகாப்பு பணி தாசில்தார் பாலாஜி ஆகியோரும் சம்பவ இடத்திற்கு வந்தனர்.

சாலை சீரமைக்கும் பணியை தொடர வேண்டாம் என்றும்வரும் வெள்ளிக்கிழமைக்குள் சேலம் மாவட்ட ஆட்சியரிடம் பேசி நடவடிக்கை எடுப்பதாகவும், அதுவரை காத்திருக்குமாறு கிராமமக்களிடம் கேட்டுக்கொண்டனர்தாசில்தார் கேட்டுக்கொண்டதையடுத்து, கிராம மக்களும் அதை ஏற்றுக் கொண்டனர்

வரும் வெள்ளிக்கிழமைக்குள் நடவடிக்கை எடுக்காவிட்டால், வரும் திங்கள்கிழமை மண்பாதையை சீரமைத்து சாலை மறியலில் ஈடுபடுவோம் என்றனர்மேலும், நாங்களே மண் பாதையை சீரமைத்து கொள்கிறோம்

எனவே, வரும் சட்டமன்ற தேர்தலில் வாக்களிக்கமாட்டோம். எனவே, வாக்கு எந்திரங்கள் எங்கள் கிராமங்களுக்குள் வரக்கூடாது என எச்சரித்தனர்பின்னர் கிராம மக்கள் கலைந்து சென்றனர்.

-நவீன் குமார்.