ஏற்காட்டில் தீபம் தொண்டு நிறுவனம் சார்பில் மகளிர் தினவிழா மற்றும் பேரணி நடைப்பெற்றது.
சேலம் மாவட்டம், ஏற்காட்டில் தீபம் தொண்டு நிறுவனம் சார்பில், தீபம் இயக்குனர் ராஜ் கமல் தலைமையில் மகளிர் தின பேரணி துவங்கியது. பேரணி ஏற்காடு பஸ் நிலையத்தில் துவங்கி ஏற்காடு டவுண், காந்தி பூங்கா, ஏற்காடு காவல் நிலையம் உள்ளிட்ட பகுதிகளை கடந்து விழா மேடைக்கு சென்று நிறைவடைந்தது.
அங்கு மகளிருக்கு விளையாட்டு போட்டிகள், கலை நிகழ்சிகள் நடத்தப்பட்டு வெற்றி பெற்றோருக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. விழாவில் ஏற்காடு யூனியன் சேர்மேன் அண்ணா துரை, துணை சேர்மேன் சுரேஷ் குமார், பாலு, புகழேந்தி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு மகளிர் தினம் குறித்து சிறப்புரை ஆற்றினர். இந்நிகழ்சியில் ஏற்காடு பகுதியில் இருந்து 500 –க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டனர்.
பாரத ஸ்டேட் பேங்க் சார்பில் மகளிர் தினத்தை முன்னிட்டு இலவச மருத்துவ முகாம்!
பாரத ஸ்டேட் வங்கியின் சேலம் மண்டல அலுவலகம் மற்றும் ஏற்காடு கிளையும் இணைந்து ஏற்காடு, காக்கம்பாடி கிராமத்தில் இலவச மருத்துவ முகாம் நடைப்பெற்றது.
ஸ்டேட் பேங்க் மண்டல அலுவலர் கிருஷ்ணசாமி தலைமை தாங்கி மருத்துவ முகாமை துவக்கி வைத்தார். முகாமில் சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவமனை, அகர்வால் மருத்துவமனை, விம்ஸ் மருத்துவமனை ஆகிய மருத்துவமனைகளில் இருந்து மருத்துவர்கள் கலந்து கொண்டு மருத்துவ சேவை வழங்கினர்.
காக்கம்பாடி சுற்றுவட்டாரத்தில் உள்ள தலைச்சோலை, பெலாத்தூர், பில்லேரி, போட்டுக்காடு ஆகிய கிராமங்களை சேர்ந்த 140-க்கும் மேற்பட்ட மக்கள் முகாமில் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.
-நவீன் குமார்.