திருச்சி – தஞ்சை தேசிய நெடுஞ்சாலையில், தஞ்சாவூரில் இருந்து திருச்சி நோக்கி சென்று கொண்டிருந்த அரசு பேருந்து, திருவெறும்பூர், அம்மன் நகர் அருகே இன்று காலை 9-45 மணியளவில், முன்னால் சென்று கொண்டிருந்த டிப்பர் லாரியின் பின்புறம் மோதியதில், பேருந்தின் முன்பகுதி பலத்த சேதமடைந்து பேருந்து ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையை விட்டு விலகி வயல் பகுதிக்குள் சென்றது.
இந்த விபத்தில் பேருந்து ஓட்டுநருக்கு பலத்தக் காயமும், பயணிகளுக்கு லேசானக் காயமும் ஏற்பட்டது.
விபத்து நடந்த இடத்திற்கு வந்த திருவெறும்பூர் காவல்துறையினர், விபத்து குறித்து விசாரணை செய்து வருகின்றனர்.
–எம்.அன்பரசன்.