தமிழக சட்டமன்ற தேர்தலையொட்டி, தமிழகம் முழுவதும் பறக்கும் படை மூலம் வாகன சோதனை நடத்தப்பட்டு வருகிறது. இதுவரை ரூ.30.15 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதில் ரூ.23.7 லட்சம் சென்னையிலும், ரூ.4.90 லட்சம் நீலகிரியிலும் பிடிபட்டது. மீதமுள்ள ரூ.2 லட்சம் வெவ்வேறு இடங்களில் பிடிபட்டுள்ளது.
இந்த தொகை அரசு கருவூலத்தில் வைக்கப்பட்டுள்ளது. இதுபற்றி தேர்தல் நடத்தும் அதிகாரி விசாரணை நடத்திக்கொண்டிருக்கிறார். பணத்தின் உரிமையாளர் அதற்கான ஆவணத்தைக் காட்டி அதைப் பெற்றுக்கொள்ளலாம் என்று தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி தெரிவித்துள்ளார்.
-கே.பி.சுகுமார்.
படங்கள்:ஆர்.அருண்கேசவன்.