திரைப்பட இயக்குனர் ஆர்.சுந்தர்ராஜன் அ.தி.மு.க.வில் இணைந்தார்!-பல்வேறு கட்சி மற்றும் அமைப்பின் நிர்வாகிகளும் முதலமைச்சர் ஜெ.ஜெயலலிதாவை நேரில் சந்தித்து ஆதரவை தெரிவித்தனர்! 

ADMK NEWS7ADMK NEWSADMK NEWS9ADMK NEWS4ADMK NEWS3ADMK NEWS5ADMK NEWS2ADMK NEWS6ADMK NEWS1ADMK NEWS.8

தமிழ்நாடு சட்டமன்ற பேரவை பொதுச் தேர்தல் நடைபெற உள்ளதை முன்னிட்டு, அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், முதலமைச்சருமான ஜெ.ஜெயலலிதாவை இன்று மாநில சிறுபான்மையினர் நல ஆணையத்தின் தலைவரும், இந்திய சுயாதீன திருச்சபைகள் மாமன்றத்தின் நிறுவனத் தலைவருமான பேராயர் டாக்டர்.மா.பிரகாஷ், உழவர் உழைப்பாளர் கட்சியின் மாநிலத்தலைவர் K.செல்லமுத்து, புரட்சி பாரதம் கட்சி தலைவர் ஜெகன் மூர்த்தி, தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் தலைவர் ஜான் பாண்டியன், மூவேந்தர் முன்னணி கழக தலைவர் சேதுராமன், மூவேந்தர் முன்னேற்ற கழக தலைவர் ஸ்ரீதர் வாண்டையார், மனித நேய ஜனநாயக கட்சியின் பொதுச்செயலாளர் தமிமுன் அன்சாரி, இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் அப்துல் சமீது மகள் பாத்திமா முகாபர், தமிழ்நாடு முத்தரையர் முன்னேற்ற சங்கத்தின் மாநிலத்தலைவர் R.விஸ்வநாதன் ஆகியோர் நேரில் சந்தித்து, அ.தி.மு.க.விற்கு  தங்களது முழுமையான ஆதரவை தெரிவித்தனர்.

மேலும், திரைப்பட இயக்குனரும், நடிகருமான ஆர்.சுந்தர்ராஜன் இன்று அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெ.ஜெயலலிதாவை நேரில் சந்தித்து அ.தி.மு.க.வின் அடிப்படை உறுப்பினராக தன்னை இணைத்துக் கொண்டார்.

-ஆர்.மார்ஷல்.