இந்த நொடி வரையிலும் கேப்டன் யாரிடமும் கூட்டணியைப் பற்றி பேசவே இல்லை என்று, தே.மு.தி.க. கொள்கை பரபரப்பு செயலாளர் வி.சி.சந்திரகுமார் 05.03.2016 அன்று அறிக்கை வெளியிட்டார்.
05.03.2016 அன்று வி.சி.சந்திரகுமார் வெளியிட்ட அறிக்கை இதோ நமது வாசகர்களின் கவனத்திற்கு:
இப்படி தே.மு.தி.க. தலைமைக்கும், தேமுதிக தலைவர் நடிகர் விஜயகாந்துக்கும் விசுவாசமாக இருந்த வி.சி.சந்திரகுமார் இன்று (05.04.2016) பிற்பகல் அப்படியே தலைகீழாக மாறியுள்ளார்.
தேமுதிக தலைவர் விஜயகாந்த் தனது கூட்டணி முடிவை மறுபரிசீலனை செய்து திமுக கூட்டணியில் இணைவது குறித்து நாளை பிற்பகலுக்குள் முடிவு எடுக்க வேண்டும் என கெடு விதித்துள்ளார். தே.மு.தி.க. தலைமைக்கு எதிராக ஒரு அணியை உருவாக்கி தற்போது போர்கொடி உயர்த்தியுள்ளார். இடைப்பட்ட ஒரு மாதக் காலத்திற்குள் என்ன நடந்தது?
தே.மு.தி.க., தி.மு.க. கூட்டணிக்கு வந்தே ஆக வேண்டும். அது நடக்கவில்லை என்றால், அக்கட்சியை உடைத்து தனி அணியை உருவாக்கி, அதை திமுகவுடன் இணைக்க வேண்டும். இதுதான் தி.மு.க. தலைமையின் மிகப்பெரிய திட்டம்.
ஆனால், தே.மு.தி.க-வை சேதப்படுத்தாமல் தி.மு.க. கூட்டணியில் எப்படியாவது இணைத்தே ஆகவேண்டும் என்பதில், தி.மு.க. தலைவர் மு.கருணாநிதி கடைசி வரை உறுதியாக இருந்தார். அதற்காக பல வழிகளில் முயற்சித்தார். ஆனால், அவர் நினைத்தது போல எதுவும் நடக்கவில்லை. அவற்றின் விளைவுதான் இப்போது நடக்கும் சம்பவங்கள்.
இந்நிலையில் தே.மு.தி.க. தலைமைக்கு எதிராக போர்கொடி உயர்த்திய நிர்வாகிகள் அனைவரையும் கட்சியிலிருந்து நீக்கி விஜயகாந்த் உத்தரவிட்டுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கை:
தேசிய முற்போக்கு திராவிட கழகம், கழக கொள்கைப் பரப்புச் செயலாளர் வி.சி.சந்திரகுமார், கழக துணைச் செயலாளர் பி.முருகேசன், உயர்மட்டக்குழு உறுப்பினர் கே.ஆர்.வீரப்பன், திருவள்ளூர் கிழக்கு மாவட்டச் செயலாளர் சி.எச்.சேகர், சேலம் மேற்கு மாவட்ட கழக செயலாளர் எஸ்.ஆர்.பார்த்திபன், வேலூர் மத்திய மாவட்டச் செயலாளர் ஜெ.விஸ்வநாதன், திருவண்ணாமலை வடக்கு மாவட்ட கழக செயலாளர் என்.கார்த்திகேயன், ஈரோடு தெற்கு மாவட்ட கழக செயலாளர் இமயம் என்.எஸ்.சிவகுமார், ஈரோடு வடக்கு மாவட்ட கழக செயலாளர் பி.செந்தில்குமார், விழுப்புரம் வடக்கு மாவட்ட கழகப் பொருளாளர் செஞ்சி சிவா ஆகியோர் கழகத்தின் கட்டுப்பாட்டை மீறியும், கழகத்தின் நற்பெயருக்கும், புகழுக்கும் களங்கம் விளைவிக்கும் வகையிலும் செயல்பட்டதால், அவரவர் வகித்து வந்த கழகப் பதவியில் இருந்தும், கழகத்தின் அடிப்படை உறுப்பினரிலிருந்தும் இன்று (05.04.2016) முதல் நீக்கப்படுகிறார்.
இவர்களுடன் கழக நிர்வாகிகள், மற்றும் தொண்டர்கள் என யாரும் எந்தவிதமான தொடர்பும் வைத்துக்கொள்ளக்கூடாது என்று கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் என குறிப்பிட்டுள்ளார் விஜயகாந்த்.
திருவள்ளூர் கிழக்கு மாவட்ட கழக பொறுப்பாளராக ஏ.வி.ஆறுமுகம் (மாவட்ட கழக அவைத்தலைவர்), திருவண்ணாமலை வடக்கு மாவட்ட கழக பொறுப்பாளராக பாபு முருகவேல் எம்.எல்.ஏ, வேலூர் மத்திய மாவட்ட கழக பொறுப்பாளராக ஸ்ரீதர் (முன்னாள் மாவட்ட துணைச்செயலாளர்), சேலம் மேற்கு மாவட்ட கழக பொறுப்பாளராக பி.ஆனந்தபாபு (கழக மாணவரணி துணைச்செயலாளர்), ஈரோடு வடக்கு மாவட்ட கழக பொறுப்பாளராக பி.கே.சுப்பிரமணி (கழக நெசவாளர் அணி செயலாளர்), ஈரோடு தெற்கு மாவட்ட கழக பொறுப்பாளராக பா.கோபால் (மாவட்ட கழக துணைச்செயலாளர்) ஆகியோர் இன்று (05.04.2016) முதல் நியமிக்கப்படுகிறார்கள். இவர்களுக்கு அந்தந்த மாவட்ட, பகுதி, ஒன்றிய, நகர, பேரூர், வட்ட, கிளை கழக, நிர்வாகிகள், சார்பு அணி நிர்வாகிகள், மற்றும் கழக தொண்டர்கள் அனைவரும் முழு ஒத்துழைப்பு தந்து கழகம் சிறப்பான வளர்ச்சிபெற பாடுபடவேண்டுமென்று கேட்டுக்கொள்கிறேன் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தே.மு.தி.க.வில் இருந்து இன்னும் பல முக்கிய பிரமுகர்களை தி.மு.க.விற்கு கொண்டு வருவதற்கு திரை மறைவில் பல்வேறு பேரங்கள் நடைப்பெற்று வருகிறது.
-டாக்டர்.துரைபெஞ்சமின்.
ullatchithagaval@gmail.com