மக்கள் நலக்கூட்டணியில் ஏற்கனவே தேமுதிக இணைந்துள்ள நிலையில் த.மா.கா தலைவர் ஜி.கே.வாசனை ஆழ்வார்பேட்டை இல்லத்தில் மக்கள் நலக்கூட்டணி தலைவர்களான வைகோ, தொல்.திருமாவளவன், ஜி.ராமகிருஷ்ணன், முத்தரசன் ஆகியோர் சந்தித்து பேசினர். இந்த சந்திப்பு சுமார் அரை மணி நேரம் நீடித்தது.
இதைத் தொடர்ந்து மக்கள் நலக் கூட்டணி தலைவர்களுடன் தமாகா தலைவர் ஜி.கே.வாசன் சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக அலுவலகத்திற்கு வந்தார். அவரை தேமுதிக இளைஞரணி தலைவர் சுதீஷ் வரவேற்றார். பின்னர், தேமுதிக தலைவர் விஜயகாந்தை சந்தித்து பேசினர். இதையடுத்து, கட்சிகளுக்குள் தொகுதி உடன்பாடு ஏற்பட்டது. இந்த உடன்பாட்டில் விஜயகாந்த், மக்கள் நலக் கூட்டணி தலைவர்கள், ஜி.கே.வாசன் ஆகியோர் கையெழுத்திட்டனர்.
அதில், தேமுதிக 104 தொகுதிகளிலும், மதிமுக 29 தொகுதிகளிலும், தமாகா 26 தொகுதிகளிலும், விடுதலை சிறுத்தைகள் 25 தொகுதிகளிலும், இந்திய கம்யூனிஸ்ட் 25 தொகுதிகளிலும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் 25 தொகுதிகளிலும் போட்டியிடுவது என முடிவு செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் G.K.வாசன் மற்றும் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவாக G.K.வாசன் மனைவி சுனிதா கடிதம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.
-எஸ்.திவ்யா.