தே.மு.தி.க., தி.மு.க. கூட்டணிக்கு வந்தே ஆக வேண்டும். அது நடக்கவில்லை என்றால், அக்கட்சியை உடைத்து தனி அணியை உருவாக்கி, அதை தி.மு.க.வுடன் இணைக்க வேண்டும். இதுதான் தி.மு.க. தலைமையின் மிகப்பெரிய திட்டம்.
ஆனால், தே.மு.தி.க-வை சேதப்படுத்தாமல் தி.மு.க. கூட்டணியில் எப்படியாவது இணைத்தே ஆகவேண்டும் என்பதில், தி.மு.க. தலைவர் மு.கருணாநிதி கடைசி வரை உறுதியாக இருந்தார். அதற்காக பல வழிகளில் முயற்சித்தார். ஆனால், அவர் நினைத்தது போல எதுவும் நடக்கவில்லை.
இந்நிலையில்,தே.மு.தி.க.வில் இருந்து விலகிய சந்திரகுமார், பார்த்திபன், சி.எச்.சேகர் ஆகியோர் தனது ஆதரவாளர்களுடன் சேர்ந்து ‘மக்கள் தே.மு.தி.க.’ என்ற கட்சியை ஆரம்பித்தனர்.
இதையடுத்து, தி.மு.க. கூட்டணியில், மக்கள் தே.மு.தி.க.வுக்கு. ஈரோடு கிழக்கு, மேட்டூர், கும்முடிப்பூண்டி ஆகிய 3 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
-டாக்டர்.துரைபெஞ்சமின்.
ullatchithagaval@gmail.com