கச்சத் தீவு விவகாரத்தில் தமிழக முதல்வர் ஜெ.ஜெயலலிதாவை குற்றப்படுத்தும் ‘சிங்கள கைகூலி’  ஆர்.நடராஜன்!  

ஆர்.நடராஜன்.

ஆர்.நடராஜன்.

R.NATARAJAN ARTICLE

கச்சநீதிமன்றம் சென்று உச்சத்தீவை மீட்பதாகச் சொல்லியிருக்கிறார் ஜெயலலிதா. என்ன உளறலாக இருக்கிறதே என்று நினைக்கிறீர்களா? கேட்பது உளறல் என்றால் சொல்வதும் உளறல்தானே.

அருப்புக்கோட்டைத் தேர்தல் பிரச்சாரத்தில் பேசிய ஜெயலலிதா உச்ச நீதிமன்றம் மூலம் கச்சத்தீவை மீட்பேன் என்று சொன்னார். இதை இப்போது சொல்வானேன்? ஆட்சியில் இருந்தபோதே செய்திருக்க வேண்டியதுதானே?

“நாடாளுமன்றத்தின் இரு அவைகளின் ஒப்புதல் இல்லாமல் பிரதமர் நம் நாட்டின் ஒரு பகுதியை இலங்கைக்கு அளித்துவிட்டார். அந்த ஒப்பந்தம் செல்லாது’ என்று உச்சநீதிமன்றம் அறிவித்துவிட்டால் தீவு நம் வசம் என்று நினைக்கிறார் ஜெயலலிதா. Possession is nine points of law என்ற மரபு இலங்கைக்கே சாதகமாகலாம்.

தும்பை விட்டு வாலைப் பிடிப்பதால் பயனில்லை. தன்னாலும், பிறராலும் செய்ய முடியாததைச் செய்வேன் என்று சொல்வது தேர்தல் பிரச்சார உத்தியாக இருக்கும். ஆனால், நடைமுறைக்கு ஒத்து வராது என்று,  தி.மு.க.வின் அதிகாரப்பூர்வ ஊடகமான ‘நக்கீரன்’ இணையதளத்தில் அமெரிக்க தூதரக முன்னாள் ஆலோசகர் ஆர்.நடராஜன் அரைவேக்காட்டுத்தனமாக இன்று (22.04.2016) எழுதியுள்ளார். வாங்கிய கூலிக்கு மாரடிக்க வேண்டும் என்பதற்காக இந்த வரலாற்று பிழையை செய்துள்ளார். இதன் மூலம் தான் ஒரு ‘சிங்கள கைகூலி’  என்பதை ஆர்.நடராஜன் அப்பட்டமாக ஒப்புக்கொண்டுள்ளார்.

1974-ஆம் ஆண்டு ஜீன் மாதம் 27-ந் தேதி கச்சத்தீவு இந்திராகாந்தியால் இலங்கைக்கு தாரைவார்க்கப்பட்டது. அன்று அரசியல் ஆதாயத்திற்காக அமைதியாக இருந்து அதை வேடிக்கைப் பார்த்த அப்போதைய தமிழக முதலமைச்சராக இருந்த மு.கருணாநிதியைப் பற்றி அந்த கட்டுரையில் ஆர்.நடராஜன் ஒரு வார்த்தைக் கூட குறிப்பிட வில்லை.

இலங்கையிடம் இருந்து கச்சத்தீவை மீட்க வேண்டும் என்று டொசோ அமைப்பின் சார்பில் உச்ச நீதி மன்றத்தில் வழக்கு தாக்கல் செய்து இப்போது கபட நாடகமாடினாரே முன்னாள் முதல்வர் மு.கருணாநிதி, அதை பற்றியும் அந்த கட்டுரையில் ஆர்.நடராஜன் ஒரு வார்த்தைக் கூட குறிப்பிடவில்லை. அந்த கட்டுரையில் எங்கெல்லாம் ‘ஜெயலலிதா’ என்று எழுதியுள்ளாரோ அந்த இடங்களில் ‘கருணாநிதி’ என்று குறிப்பிட்டு இருந்தால் அந்த கட்டுரை நூறு சதவீதம் உண்மையை பிரதிப்பலிப்பதாக இருந்திருக்கும்.

ஆனால், தமிழக முதல்வர் ஜெ.ஜெயலலிதாவை குறைச் சொல்ல வேண்டும், குற்றப்படுத்த வேண்டும் என்ற கெட்ட நோக்கத்தில் இக்கட்டுரையை ஆர்.நடராஜன் எழுதியுள்ளார். இது வன்மையாக கண்டிக்கத்தக்கது.

1960-ம் ஆண்டைய உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முற்றிலும் முரணாக, நாடாளுமன்றத்தின் இரு அவைகளின் ஒப்புதல் இல்லாமல், இந்தியா மற்றும் இலங்கைக்கு இடையே 1974 மற்றும் 1976 ஆம் ஆண்டுகளில் ஏற்பட்ட ஒப்பந்தங்கள் வாயிலாக கச்சத்தீவு இலங்கைக்கு சட்ட விரோதமாக தாரைவார்க்கப்பட்டு இருக்கிறது என்று கூறி, தமிழகத்தின் எதிர் கட்சி தலைவராக தான் இருந்தபோதே (2008-ம் ஆண்டு) அ.இ.அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெ.ஜெயலலிதா உச்ச நீதிமன்றத்தில் மனு செய்துள்ளார். இது ஆர்.நடராஜனுக்கு தெரியுமா? தெரியாதா?

14th-I Session-11-30014th-I Session-11-300214th-I Session-11-3003

14th-I Session-11-3004

2011 ஆம் ஆண்டு தமிழகத்தின்  முதலமைச்சராக ஜெ.ஜெயலலிதா பதவி ஏற்றவுடன் முதல் கூட்டத்திலேயே தமிழக சட்டபேரவையில் இயற்றப்பட்ட வரலாற்று சிறப்பு மிக்க தீர்மானங்கள் விபரம்:

2011 ஆம் ஆண்டு தமிழகத்தின் முதலமைச்சராக ஜெ.ஜெயலலிதா பதவி ஏற்றவுடன் முதல் கூட்டத்திலேயே தமிழக சட்டபேரவையில் இயற்றப்பட்ட வரலாற்று சிறப்பு மிக்க தீர்மானங்கள் விபரம்:

தான்  மீண்டும் தமிழகத்தின்  முதலமைச்சராக பதவி ஏற்ற பிறகு, தமிழக சட்டசபையில் ஜூன் 9, 2011 அன்று நடந்த சட்டபேரவை தீர்மானத்தில் தமிழக வருவாய் துறையையும் வழக்கில் சேர்க்க வேண்டும் என்று ஜெ.ஜெயலலிதா தீர்மானம் நிறைவேற்றியுள்ளார். இது ஆர்.நடராஜனுக்கு தெரியுமா? தெரியாதா?

மேலும், தமிழகம் வளமாகவும், தமிழக மக்கள் நலமாகவும் வாழவேண்டும் என்பதற்காக, காவிரி நதிநீர் பிரச்சனை, முல்லைப் பெரியாறு அணைப்பிரச்சனை… இப்படி இதுவரை எந்த முதலமைச்சரும் யாரும் தீர்க்க முடியாத தமிழகத்தின் வாழ்வாதார உரிமைகளை மீட்டெடுப்பதற்காக, சட்ட ரீதியாகவும், சத்தியத்தின் வழியாகவும், தொடர்ந்து போராடி, மாபெரும் வரலாற்று சாதனைகளை நிகழ்த்திய   பெருமை   தமிழக முதல்வர் ஜெ.ஜெயலலிதாவிற்கு மட்டும்தான் உண்டு.

மாநில அரசுகளை மத்திய அரசின் குத்தகை பிரதேசங்களாக நினைத்து கொண்டு, ஆட்டிப்படைத்து அதிகாரம் செலுத்தி, அடிமைகளாக நடத்தி வந்த மத்திய ஆட்சியாளர்களுக்கு, சட்ட ரீதியாக பாடம் புகட்டி, மாநில உரிமைகளை தட்டிக் கேட்ட பெருமையும், இந்தி அரசியல் வரலாற்றில் தமிழக முதல்வர் ஜெ.ஜெயலலிதாவிற்கு மட்டும்தான் உண்டு.

கச்சத் தீவை மீட்பதற்கு சட்ட ரீதியாக நடவடிக்கை எடுங்கள் அப்போதுதான் தமிழக மீனவர்கள் நிம்மதியாக வாழ முடியும் என்பதை வலியுறுத்தி முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கிடமும், தற்போதைய பிரதமர் நரேந்திர மோதியிடமும் பல முறை நேரிலும், நூற்றுக்கணக்கான முறை கடிதம் மூலமாகவும் தொடர்ந்து வலியுறுத்தி வரும் உண்மையான தமிழின தலைவர் ஜெ.ஜெயலலிதாதான் என்பது தமிழக மக்களுக்கும், உலகமெங்கும் உள்ள தமிழர்களுக்கும் நன்றாகவே தெரியும். ஆர்.நடராஜன் போன்ற தறுதலைகளுக்கு தெரிய வேண்டிய அவசியம் இல்லை.

பிறராலும் செய்ய முடியாததைச் செய்வேன் என்று ஜெ.ஜெயலலிதா சொல்வது தேர்தல் பிரச்சார உத்தி அல்ல. அதுதான் தன்னம்பிக்கை, அதற்கு பெயர்தான் தலைமை பண்பு, அதுதான் ஜெ.ஜெயலலிதாவின் தனித்தன்மை. இந்திய அரசியலில் இன்று அசைக்க முடியாத மாபெரும் அரசியல் சக்தியாக ஜெ.ஜெயலலிதா உருவெடுத்து இருப்பதற்கு முக்கிய காரணமே அவரது துணிச்சலும், தமிழக மக்களின் அளவிட முடியாத அன்பும், தமிழக மக்கள் அவருக்கு அளித்து வரும் மகத்தான ஆதரவும்தான்.

தமிழகத்தின் வாழ்வாதார உரிமைகளை மீட்டெடுப்பதற்காக, ஆட்சி அதிகாரத்தைப் பற்றியெல்லாம் கடுகளவும் கவலைப்படாமல், துணிச்சலான முடிவுகளை எடுக்க கூடிய ஒரே மக்கள் செல்வாக்கு உள்ள தலைவர் ஜெ.ஜெயலலிதாதான் மட்டும்தான் என்பதை  நடைபெற இருக்கும் சட்டமன்ற தேர்தல் வெற்றியின் மூலம் தமிழக மக்கள் நிச்சயம் நிரூபிப்பார்கள்.

 -டாக்டர்.துரைபெஞ்சமின்.

ullatchithagaval@gmail.com