தி.மு.க. தலைவர் மு.கருணாநிதி திருவாரூர் தொகுதியில் வேட்பு மனு தாக்கல் செய்தார்!  

mk mother3 mk mother1mk mother2mk mother

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் திருவாரூர் தொகுதியில் போட்டியிடும் தி.மு.க. தலைவர் மு.கருணாநிதி இன்று காலை 11 மணியளவில் காட்டூரில் உள்ள தனது தாயார் அஞ்சுகம் அம்மையார் நினைவிடத்துக்கு சென்று அஞ்சலி செலுத்தினார்.

பின்னர் அங்கிருந்து புறப்பட்டு சன்னதி தெருவிலுள்ள வீட்டுக்குச் சென்று சிறிது நேரம் ஓய்வு எடுத்தார்.

mk in tvr

mk in tvr.2

mk in tvr1

mk in tvr3

மதியம் 12.30 மணியளவில் வீட்டிலிருந்து புறப்பட்டு தெற்கு வீதியிலுள்ள வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்துக்கு வந்தார். அங்கு திருவாரூர் தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் இரா. முத்துமீனாட்சியிடம் திருவாரூர் சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிட வேட்பு மனுத்தாக்கல் செய்து, அதற்கான உறுதிமொழியை படித்து கையெழுத்திட்டு பின்னர் அதற்கான படிவத்தினை வழங்கினார்.  

இவரை திருவாரூர் நகர்மன்றத்தின் துணைத் தலைவர் டி.செந்தில் முன்மொழிந்தார். மாற்று வேட்பாளராக திருவாரூர் முன்னாள் ஒன்றிய செயலாளர்  ஆர்.பி.சுப்ரமணியன் வேட்புமனு தாக்கல் செய்தார்.

-கே.பி.சுகுமார்.