விவசாயிகள் கடன் அனைத்தும் தள்ளுபடி! -தமிழ்நாடு புதிய அமைச்சரவை பதவியேற்பு விழா!-முழு விபரம்

tncm23052016pr230516e_0

pr230516a_0tncm23052016 a

chennai

தமிழக முதலமைச்சராக ஆறாவது முறையாக இன்று (23.05.2016) பதவியேற்ற ஜெ.ஜெயலலிதா, அவர் செல்லும் வழியெங்கும் கட்அவுட், பேனர்கள் வைக்கக் கூடாது என்று அ.தி.மு.கவினருக்கு உத்தரவிட்டார். இதனால் போயஸ் கார்டனிலிருந்து, விழா நடக்கும் சென்னைப் பல்கலைக்கழக மண்டபம் வரை பேனர், கட்அவுட் என எதுவுமே கண்ணில் தென்படவில்லை. சாலைகள் மவுனமாக இருப்பதைப் பார்த்து மக்கள் அனைவரும் ஒருவருக்கொருவர் இதுக்குறித்து ஆச்சரியமாக பேசிக்கொண்டனர். மேலும், அச்சு மற்றும் காட்சி ஊடகத்தைச் சேர்ந்த செய்தியாளர்கள் அனைவரும் இதை கண்டு ஆச்சரியத்தில் உறைந்து போனார்கள்.

pr230516d

pr230516c

முதலமைச்சராக பதவியேற்றுக் கொண்ட ஜெ.ஜெயலலிதா, சென்னை புனித ஜார்ஜ் கோட்டையில் அமைந்துள்ள தலைமைச் செயலகத்தில் உள்ள முதலமைச்சர் அறைக்கு வருகை தந்து தமது பணியைத் தொடங்கினார். முதல் பணியாக அதிமுக தேர்தல் அறிக்கையில் அறிவிக்கப்பட்ட வாக்குறுதிகளை நிறைவேற்றும் வகையில், முக்கியத் திட்டங்களுக்கு ஒப்புதல் அளித்து அதற்குரிய கோப்புகளில் கையெழுத்திட்டார்.

முதலமைச்சர் ஜெ.ஜெயலலிதா ஆணை பிறப்பித்து முதல் கையொப்பமிட்ட கோப்புகள் பின்வருமாறு

 1)வேளாண் பெருமக்களின் நலன் காக்கும் வகையில், கூட்டுறவு வங்கிகளுக்கு சிறு, குறு விவசாயிகள் செலுத்தவேண்டிய பயிர்க்கடன், நடுத்தர காலக்கடன் மற்றும் நீண்ட காலக்கடன் ஆகிய அனைத்தும் தள்ளுபடி செய்யப்படும் என்னும் வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில், கூட்டுறவு வங்கிகளிடமிருந்து 31.3.2016 வரை சிறு, குறு விவசாயிகளால் பெறப்பட்ட பயிர்க்கடன், நடுத்தரகாலக் கடன் மற்றும் நீண்டகாலக் கடன் ஆகிய அனைத்தையும் தள்ளுபடி செய்து உத்தரவிடும் கோப்பில் முதலமைச்சர் ஜெ.ஜெயலலிதா கையொப்பமிட்டார். இதன் காரணமாக அரசுக்கு 5780 கோடி ரூபாய் செலவு ஏற்படும்.

2)மின்சாரம் அனைவருக்கும் மிகவும் அத்தியாவசியமான ஒன்று என்பதால் தற்போதைய கணக்கீட்டு முறைப்படி 100 யூனிட் மின்சாரம் கட்டணம் ஏதுமில்லாமல் வீடுகளுக்கு வழங்கப்படும் என்ற வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில் அதற்கான கோப்பில் முதலமைச்சர் கையெழுத்திட்டார். இதன் காரணமாக அரசு ஆண்டு ஒன்றுக்கு கூடுதலாக 1607 கோடி ரூபாய் மின் வாரியத்திற்கு மானியமாக வழங்கும். இந்தச் சலுகை 23.5.2016 முதல் நடைமுறைப்படுத்தப்படும்.

3) 2011ம் ஆண்டு தேர்தல் அறிக்கையில் கொடுத்த வாக்குறுதியின்படி இளநிலைப்பட்டம் அல்லது டிப்ளமோ பட்டயம் பெற்ற பெண்களுக்கு திருமண உதவித்தொகையாக 50000 ரூபாயும் திருமாங்கல்யம் செய்ய 4 கிராம் தங்கமும் தற்போது வழங்கப்பட்டு வருகிறது. படித்த ஏழைப்பெண்களுக்கு திருமண நிதி உதவியாக 25000 ரூபாய் நிதி உதவியுடன் திருமாங்கல்யம் செய்ய 4 கிராம் தங்கம் வழங்கப்படுகிறது.

தற்போதைய தேர்தல் அறிக்கையில் கொடுக்கப்பட்ட வாக்குறுதியின்படி அனைத்து திருமண நிதி உதவி திட்டங்களின் கீழ் வழங்கப்படும் நிதி உதவியுடன் திருமாங்கல்யத்திற்கென வழங்கப்படும் தங்கம் 4 கிராம் என்பதிலிருந்து ஒரு சவரன் அதாவது 8 கிராம் என உயர்த்தி வழங்கும் கோப்பில் முதலமைச்சர் ஜெ.ஜெயலலிதா கையொப்பமிட்டார்.

4)தேர்தல் அறிக்கையில் கொடுத்த வாக்குறுதியின்படி கைத்தறி நெசவாளர்களுக்கு தற்போது கட்டணமில்லாமல் வழங்கப்படும் மின்சாரத்தை 200 யூனிட்கள் எனவும் விசைத்தறிக்கு வழங்கப்படும் கட்டணமில்லா மின்சாரத்தை 750 யூனிட்டுகளாக உயர்த்தியும் வழங்கும் கோப்பில் முதலமைச்சர் ஜெ.ஜெயலலிதா கையொப்பமிட்டார்.

5)மதுவிலக்கு படிப்படியாக அமல்படுத்தப்பட்டு பூரண மதுவிலக்கு என்ற நிலை எய்தப்படும் என்றும், அதனை நிறைவேற்றும் வகையில் முதலில் சில்லறை மதுபானக் கடைகள் திறந்திருக்கும் நேரம் குறைக்கப்படும் என்றும், கடைகளின் எண்ணிக்கை குறைக்கப்படும் என்றும், பின்னர் சில்லறை மதுபானக் கடைகளுடன் இணைந்த பார்கள் மூடப்படும் என்றும் குடிப்பழக்கத்திற்கு உள்ளாகி உள்ளோரை மீட்பதற்கான மீட்பு நிலையங்கள் ஏற்படுத்தப்படும் என்றும், இவை அனைத்தும் செயல்படுத்தப்பட்டு படிப்படியாக பூரண மதுவிலக்கு என்னும் இலட்சியம் அடையப்படும் என்றும் தேர்தல் அறிக்கையில் முதலமைச்சர் ஜெ.ஜெயலலிதா தெரிவித்திருந்தார்.

அந்த வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில் டாஸ்மாக் சில்லறை விற்பனை மதுபானக்கடைகள் மற்றும் அவற்றுடன் இணைந்த பார்கள் இதுவரை காலை 10 மணி முதல் இரவு 10 மணி வரை இயங்கிவரும் நிலையில் 24.05.2016 முதல் சில்லறை விற்பனை மதுபானக்கடைகள் மற்றும் பார்கள் நண்பகல் 12 மணியிலிருந்து இரவு 10 மணி வரை இயங்கும் என்ற உத்தரவு, மற்றும் 500 டாஸ்மாக் சில்லறை மதுபானக்கடைகள் மூடப்படும் என்ற உத்தரவு, ஆகியவற்றுக்கான கோப்பில் முதலமைச்சர் ஜெ.ஜெயலலிதா கையொப்பமிட்டார்.

tncm23052016.b

pr230516b_0
 தமிழ்நாடு அமைச்சர்களின் இலாகா விவரங்கள்:PR210516PR2105162PR2105163PR2105164PR2105165
முதலமைச்சர் ஜெ.ஜெயலலிதா-பொது, இந்திய ஆட்சிப் பணி, இந்திய வனப் பணி, பொதுநிர்வாகம், காவல் மற்றும் உள்துறைகள்

ஓ.பன்னீர்செல்வம் – நிதித்துறை

திண்டுக்கல் சீனிவாசன் – வனத்துறை

எடப்பாடி பழனிச்சாமி – பொதுப்பணி, நெடுஞ்சாலை, சிறு துறைமுகங்கள்

செல்லூர் ராஜு – கூட்டுறவு, தொழிலாளர் நலன்

தங்கமணி − மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை

எஸ்.பி வேலுமணி − உள்ளாட்சித்துறை

டி.ஜெயக்குமார் – மீன்வளத்துறை

சி.வி.சண்முகம் – சட்டம், சிறைத்துறை மற்றும் நீதித்துறை

டாக்டர் சரோஜா – சமூக நலன், சத்துணவு

கே.பி.அன்பழகன் – உயர்கல்வித்துறை

காமராஜ் உணவுத்துறை, இந்து சமய அறநிலையத்துறை

கே.சி.கருப்பண்ணன் – சுற்றுச்சூழல்

எம்.சி.சம்பத் – தொழிற்துறை அமைச்சர்

டாக்டர்.சி.விஜயபாஸ்கர் − சுகாதாரம், குடும்ப நலத்துறை

உடுமலை ராதாகிருஷ்ணன் – வீட்டுவசதி

துரைகண்ணு – விவசாயம், கால்நடைத்துறை

ஓ.எஸ்.மணியன் – ஜவுளி மற்றும் கைத்தறி நெசவு

கடம்பூர் ராஜு − செய்தி மற்றும் விளம்பரம்

ஆர்.பி.உதயகுமார் – வருவாய்துறை

எஸ்.பி.சண்முகநாதன் -பால்வளத்துறை

ராஜேந்திரபாலாஜி – ஊரக தொழில்துறை

பெஞ்சமின் − பள்ளி கல்வி, விளையாட்டு, இளைஞர் நலன்

வீரமணி – வணிகவரித்துறை

மணிகண்டன் – தகவல் தொழில்நுட்பத்துறை

வெல்லமண்டி நடராஜன் – சுற்றுலா

வளர்மதி – பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை

ராஜலட்சுமி – ஆதிதிராவிடர் பழங்குடியினர்

எம்.ஆர்.விஜயபாஸ்கர் – போக்குவரத்துத்துறை

செம்மலை − தற்காலிக சபாநாயகர்

-கே.பி.சுகுமார்.

படங்கள்: சி.மகேந்திரன்.