இருக்கை ஒதுக்கீடு மூலம் ஸ்டாலினை அவமதிக்கும் உள்நோக்கம் எனக்கு இல்லை: தமிழக முதல்வர் ஜெ.ஜெயலலிதா விளக்கம்.

TNCM JJ 19.05.2016TN.CM JJ Thank mk stalin

 

23-05-2016 அன்று நடைபெற்ற பதவியேற்பு விழாவில் மு.க. ஸ்டாலின்.

23-05-2016 அன்று நடைபெற்ற பதவியேற்பு விழாவில் மு.க. ஸ்டாலின்.

தமிழக முதல்வராக ஜெ.ஜெயலலிதா 6-வது முறையாக தவியேற்ற விழாவில், திமுக பொருளாளர் மு..ஸ்டாலினுக்கு பின்வரிசையில் இருக்கை ஒதுக்கப்பட்டது தொடர்பாக தமிழக முதல்வர் ஜெ.ஜெயலலிதா விளக்கம் அளித்துள்ளார்.

அதில், ‘எனது பதவியேற்பு விழாவில் மு..ஸ்டாலின் கலந்து கொண்டதில் மகிழ்ச்சியடைகிறேன். அவருக்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். விழா அரங்கில் எம்.எல்..க்கள் அமர்வதற்காக ஒதுக்கப்பட்டிருந்த இடத்தில் ஸ்டாலின் அமர்ந்திருந்தார். பொதுத்துறை அதிகாரிகள் பதவி வரிசைப்படியே இருக்கையை ஒதுக்கியுள்ளனர்.

எனவே, ஸ்டாலின் அவருக்கு பின் வரிசையில் இருக்கை ஒதுக்கப்பட்டதில் ஏதேனும் வருத்தம் ஏற்பட்டிருந்தாலும், அவருக்கு நான் இத்தருணத்தில் ஒரு விளக்கத்தை தர விரும்புகிறேன். இருக்கை ஒதுக்கீடு மூலம் திமுக-வையோ, ஸ்டாலினையோ அவமதிக்கும் உள்நோக்கம் எனக்கு இல்லை.

ஒருவேளை, ஸ்டாலின் எனது பதவியேற்பு விழாவில் கலந்து கொள்வதாக அதிகாரிகள் முன்னரே எனக்குத் தெரிவித்திருப்பார்கள் என்றால், மரபு விதிகளைத் தளர்த்தி அவருக்கு முன் வரிசையில் இருக்கை ஒதுக்க அறிவுறுத்தியிருப்பேன்.

அவருக்கு எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வதுடன், மாநிலத்தின் நன்மைக்காக அவரது கட்சியுடன் இணைந்து பணியாற்ற காத்திருக்கிறேன்.’ என்று தமிழக முதல்வர் ஜெ.ஜெயலலிதா குறிப்பிட்டுள்ளார்.

-ஆர்.அருண்கேசவன்.