காசியில் கங்கையில் சமாதி அடைகிறேன்: வேந்தர் மூவீஸ் நிறுவனர் மதனின் மரண வாக்கு மூலம்! பச்சைமுத்து @ பாரிவேந்தரின் தொழில் மற்றும் அரசியல் இரகசியங்கள் அம்பலம்!

vendhar-movies madan with pachamutthuvendhar-movies

2011ம் ஆண்டு S.மதன் அவர்களால் நிறுவப்பட்டது வேந்தர் மூவீஸ். இந்த நிறுவனம் ஆதி நடித்தஅரவான்படத்தை முதல் படமாக வெளியீட்டு திரைத்துறையில் நுழைந்தது. பின்னர் விஷால் நடித்தபாண்டிய நாடுதிரைப்படத்தை வெளியீட்டதுபின்னர் சிவா நடித்ததில்லு முள்ளுபடம் மூலமா  தயாரிப்பை ஆரம்பித்தார்  மதன். வேந்தர் மூவீஸ் நிறுவனம் திரைப்படம் தயாரிப்பதை விட விநியோகம் செய்வதில் மிக அதிக கவனம் செலுத்தி சுமார் இருபது படங்களுக்கும் மேல் விநியோகம் செய்துள்ளனர்.

திரைப்படத்துறை மட்டுமின்றி, வெளியுலகிலும் மதன் SRM கல்லூரி மற்றும் SRM குழுமம் நிறுவனர் பச்சைமுத்து (என்னும்) பாரிவேந்தர் அவர்களுடைய பினாமி என்று சொல்லப்பட்டு வந்தது. வேந்தர் மூவிஸின் பல திரைப்பட விழாக்களில் பச்சைமுத்து கலந்துகொண்டது குறிப்பிடத்தக்கது. இது மட்டுமின்றி SRM கல்லூரிகளில் எந்த ஒரு மாணவன் சீட் தேவை என்றாலும், மதனை சந்திப்பது வழக்கம் சில நேரங்களில் அது அவசியமாகவும் இருந்துள்ளது. பெரும்பாலும் SRM கல்லூரியில் சேரும் மாணவர்கள் தாங்கள் செலுத்தப்பட வேண்டிய நன்கொடை (கேபிடேஷன் பீஸ்-Capitation Fees) மதனிடம் செலுத்துவது வழக்கம்.  அந்த நன்கொடை பணம் மதன் மூலமாக SRM கல்லூரிக்கு சென்றடைந்து விடும். SRM குழுமம் நிறுவனர் பச்சைமுத்துக்கு மிக நெருக்கமானவர் மற்றும் நம்பிக்கையானவராகவும் மதன் இருந்துள்ளார்.

இப்படி இருக்கும் சூழலில் சிலர் மதனை பற்றி பச்சைமுத்து-விடம் தவறாக சொல்லி இருவருக்குள் ஒரு பிளவை மேற்கொண்டுள்ளனர். இதன் காரணமாக மதனுக்கும், பச்சைமுத்துக்குமான உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளது.

இதன் காரணமாகவேந்தர் மூவீஸ்மதன் ஐந்து பக்கம் கொண்ட ஒரு கடிதத்தை தன்னுடையவேந்தர் மூவீஸ்லெட்டர் பேடில் எழுதி வைத்துவிட்டு சென்றுள்ளார். அந்த கடிதத்தில்காசியில் கங்கையில் சமாதி அடைகிறேன்என்று குறிப்பிட்டுள்ளார். அது மட்டும்மின்றி SRM கல்லூரி சம்மந்தமாக சில முக்கிய தகவல்களை பற்றியும்அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். கடிதத்தை எழுதி வைத்து விட்டு சென்ற மதன் எங்கு இருக்கிறார்? என்ன ஆனார்? என்பது இதுவரை எந்த தகவலும் இல்லை. மதன் இப்படிப்பட்ட ஒரு சர்ச்சைக்குரிய கடிதத்தை எழுதிவிட்டு காணாமல் சென்றுள்ளதால், SRM கல்லூரிக்கும், SRM குழுமத்திற்கும் மற்றும் அதன் நிறுவனர் பச்சைமுத்துவிற்கும் தர்ம சங்கடம் ஏற்பட்டுள்ளது

vendhar-movies madan

madan lrmadan lr.jpg f

என் நண்பர்களுக்கு, என் உயிர் வேந்தருக்கு, என் குடும்பத்தினருக்கு,

ஒரு zero-வில் தொடங்கி, zero-வில் முடிகிறது. என் வாழ்கை கடைசியில் என்ன ஒரு நிம்மதி, காசியில் கங்கையில் சமாதி அடைகிறேன். காசி விஸ்வநாதர் இருக்கும் இடத்தில் மரணம் அடைந்தால் அடுத்த ஜென்மம் இல்லை. எனக்கு அடுத்த ஜென்மமே வேண்டாம். எந்த ஒரு ஆசையும் இல்லாமல் செல்கிறேன். அப்புறம் என்ன இந்த letter. என்னிடம் Admission பணம் தந்தவர்களும், எனக்காக சினிமாவில் முதலீடு செய்தவர்கள் பயப்பட வேண்டாம். பணம் SRM நிறுவனத்திலும் mgm(ODY) நிறுவனத்திலும் safe ஆகா உள்ளது. நீங்கள் அவர்களிடம் பெற்று கொள்ளலாம். ஐயா என் வாழ்வில் எனக்கு தெரிந்த ஒரே மந்திரம் வேந்தர். எனக்கு ஒரு பெயரை கொடுத்து என்னை இந்த உலகுக்கு காட்டியவர். SRM நிறுவனம் என்றால் Admission, சினிமாவில், கட்சியில் (IJK) மதன் தான் என்று பெயரை கொடுத்தவர். என் தலைவருக்காக வாழ்ந்தேன். தலைவனால் போகிறேன். SRM group No (1) ஆகா வர வேண்டும் என்று பாடுபட்டேன். SRM-க்கு எந்த ஒரு பிரச்னை என்றால் முதலில் நான் நின்றேன். SRM என்று ஒரு university யாக வளர்வதற்கு எங்கள் Group ஒரு காரணம். எல்லா seat யும் full. எல்லா இடத்திலும் வேலை. எப்படி சாத்தியம். இது Vendharக்கு தெரியுமோ தெரியாதோ ஆனால் SRM இல்லாத எல்லா College Chairmanக்கும் மதனை தெரியும். ஏன் என்றால், எனக்கு வேந்தர் மேல் உள்ள வெறி. அவர் மனம் வருத்தபடகூடது என்று அவருக்காக எல்லாம் செய்தேன். மாணவர்கள் கல்லூரியில் செலுத்தும் பணம் குறைவாக இருக்கும். ஆனால், கல்லூரிக்கு போகும் பணம் நிறைவாக இருக்கும். எப்படி? எல்லாம் என் கையில் இருந்து. என் முயற்சி. என் தலைவனிடம் பேர் வாங்க வேண்டும். தலைவர் எப்போதும் என்னை கூட வைத்து கொள்ள வேண்டும் என்று வெறி. நீங்கள் நம்பாமல் இருக்கலாம். என்னிடம் 8 வருடமாக உள்ள பெற்றோர் Address, மாணவர்கள் Phone  Number உள்ளது நீங்கள் விசாரிக்கலாம். Tiruchi Medical College Permission கிடைக்கவில்லை. இரண்டு வருடமாக நடக்கவில்லை. ஐயா முகம் வாடியது. நான் என்ன செய்தேன். எவ்வளவு செய்தேன் என்று அவருக்கு தெரியாது. ஆனால் என் நண்பர்களுக்கு தெரியும் எல்லாத்துக்கும் Proof உள்ளது. இந்த வருடம் P.6 and U.6 Medical admission NEET Exam இருந்தும் 102 Seat Fullஆகா உள்ளது SRM-யும் MGM-மியும். எப்படி? மாணவர்கள் Tiruchi Medical Collegeம் 1 வருடமாக வெயிட் செய்கிறாகள் எப்படி? எல்லாம் நான் பட்ட உழைப்பு. IJK Party கட்சி தொடங்கி முதல் மாநாடு. Train-ல் வெளி மாநில மாணவர்கள், 100 Bus மாணவர்கள் கலந்து கொண்டனர். எப்படி Bihar. election. 14 தொகுதில் IJK நின்றது எப்படி? கட்சி தொடங்கி 6 மாதம் இருக்கும் போது எப்படி MLA.[Tirunelvi] election, Southல், IJK எப்படி வந்தது, BJP மாநாடு., Counsilor election., Puthukotai Bye election., Perabalur MP election, யார் செலவு செய்தது நான் தான். நான் பொய் சொல்லவில்லை எல்லாத்தை இணையதளத்தில் U-tube-லிம் பார்க்கலாம். [சினிமா] ஒரு படத்தில் Director shankar ஐயா பெயரை கேவலபடுதியதால் வந்தது தான் இந்த வேந்தர் மூவீஸ். எத்தனை படம் பண்ணினோம் எல்லாம் நஷ்டம். தலைவா படம் இவர் பேர் போட்டதால் படத்தையே நிறுத்தி விட்டார்கள். linga, Payumpuli எல்லாம் நஷ்டம் இருந்தாலும் Vendhar movies நிற்கவே இல்லை. இன்னும் படம் எடுத்து கொண்டு இருக்கிறது. என் ஐயா பெயரில் உள்ளது.

அதனால் எல்லாம் நல்ல தானா போகுது அப்புறம் ஏன் இந்த முடிவு! ஐயா குடும்பத்துக்கு சந்தேகம் வருது. என்ன சந்தேகம். மதன் இவர் பையனா? இவர் ஏன் மதனுக்கு ஏன் முதலிடம் கொடுக்கிறார். ஐயாவிற்கு Presssure. ஆனால் என்னை விட்டு கொடுக்கவில்லை எனக்கு வந்தது என்ன? Income tax raid 6 ½ கோடி போச்சு., ஒரு பொய் என் மேல் MR. Ravi recommadation-ள்ள, Ravi சார் கட்சியில் வரார் Admissionக்கு மதனை வரவிட கூடாது. கட்சியில் மதனை வெளியே கொண்டு வர வேண்டும் ஐயாவையும், மதனையும் பிரிக்கணும். ஏதோ சொத்தை என் பெயரில் எழுதி வைத்து விடுவார் என்று, Kerala போய் பில்லி சூனியம் வர வைத்து விட்டாச்சு. எனக்கு அதை பற்றி கவலை இல்லை. ஆனா கடந்த 6 மாதமாக ஐயா என்னிடம் பேசுவது இல்லை. Phone கட்டு பண்ணார் ,நேத்து கூட காசு அனுப்ப சொல்லு Ranga Babu சார் போன் பண்றார். Sukumar phone பண்றார். நான் யாருக்காக வாழ்ந்தேனோ, யாருக்கு செலவு பண்ணனோ அவர் பேசுவது இல்லை. Election-க்கு கூப்பட வில்லை. அதனால் இந்த முடிவு. நான் போறேன். Already இது புதுசு இல்லை Nov 30 Try பண்ணினேன் முடியல் So இப்போது நான் போறேன். என் கோரிக்கைகள் Vendhar family-க்கு மதன் போயிட்டானே SRM அவருக்கு என்ன சம்மதம் இல்லை ரவி சொல்வார். ஆனால் இந்த தடவை அது நடக்காது.

(1) 8 வருடமாக நான் SRMக்கு போட்ட student list நான் இதில் சேர்த்து இருக்கிறேன்.

(2) Vendhar movies, Vendhar TV Bank Statement connection பார்த்தால் தெரியும்.

(3) Income tax raidயில் எடுத்த Payment Refund SRM வாங்கி உள்ளது.

(4) Vendhar TV Satellite Telecast ஆகும் படங்களில் நிறைய படங்கள் என் பெயரில் உள்ளதா இருக்கும். அதுக்கு எந்த ஒரு Payment நான் வாங்கி இருக்க மாட்டேன். இன்னும் நிறைய மேட்டர் இருக்கு. நான் இல்லாவிட்டால் என்ன. என் உயிர் நண்பர்கள் Press-க்கு வருவார்கள்.

நான் last ஆக கேட்பது என்னனா.

இந்த நான் அனுப்பிய list P6/U6 மாணவர்கள் எல்லாம் College சேரனும்.

அவர்களிடம் வாங்கி பணம் உங்களிடம் முழுமையாக கொடுக்க பட்டு உள்ளது.

NEET வந்தால் அவர்களுக்கு அந்த பணம் திரும்ப கொடுக்கப்படவேண்டும்.

Vendhar movies மேல் எந்த கடனும் வர கூடாது. இதையும் மீறி நீங்கள் என் நண்பர்களோ, என் குடும்பத்தையோ தொந்தரவு செய்தால் உங்களை கடவும் மன்னிக்க மாட்டார். So ஐயா, நான் உங்களை பார்க்காமல் போகிறேன் என் கோரிக்கைகளை நிறைவேற்றுங்கள்.

உங்கள் உயிர்

மதன்

(கையொப்பம்)

-டாக்டர் துரைபெஞ்சமின்
ullatchithagaval@gmail.com