15வது சட்ட பேரவையின் முதல் கூட்டத் தொடர் ஆளுனர் உரையுடன் இன்று துவங்கியது.
ஆளுனர் உரையில் அடங்கியுள்ள முக்கிய அம்சங்கள்:
32 ஆண்டுகளுக்குப் பிறகு தொடர்ந்து 2-வது முறையாக ஒரு ஆட்சிக்கு மக்கள் வாய்ப்பு.
ஒவ்வொருவரும் நன்கு உணர்ந்து மாநிலத்தின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கு அயராது பாடுபடுவீர்கள் என நம்புகிறேன்.
உயர்நீதிமன்றத்தில் தமிழை வழக்காடு மொழியாக்க இந்த அரசு பாடுபடும்.
தமிழ் அறிஞர்களுக்கு உரிய அங்கீகாரம் வழங்கப்படும்.
ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்க பாடுபடும்.
முதலமைச்சர் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் மீதான நம்பிக்கையை மக்கள் மீண்டும் நிலை நிறுத்தியுள்ளனர்.
நாட்டிலேயே முதன்மை மாநிலமாக தமிழகம் முன்னேறி வருகிறது.
அமைதி, வளம், வளர்ச்சி என்ற இலக்கை நோக்கி நடைபோடுகிறது.
அண்டை மாநிலங்களுடனான நதிநீர் பிரச்சனைகளை தீர்ப்பதில் தனி கவனம்.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசிடம் வலியுறுத்தப்படும்.
5 தேர்தல் வாக்குறுதிகள் முதல் நாளிலேயே நிறைவேற்றம்.
தமிழகத்தில் லோக் அயுக்தா நிறுவப்படும்.
மாநிலங்களுக்கிடையே நியாயமான நிதிப் பகிர்வை மத்திய அரசு கடைப்பிடிக்க வேண்டும்.
அம்மா அழைப்பு மையம் மேலும் வலுப்படுத்தப்படும்.
மாநில வளர்ச்சிக்காக மத்திய அரசுடன் இணைந்து செயல்பட தயார்.
வெள்ளத்தினால் தமிழகத்தின் பல பகுதிகள் பாதிக்கப்பட்டது, ஆனால், அரசின் துரித நடவடிக்கையால் தமிழகம் மீண்டுள்ளது.
காவல்துறை நவீனமயமாக்கப்படும். காவல்துறைக்கு முழு சுதந்திரம் வழங்கப்படும். தமிழகம் அமைதி பூங்கா தொடர்ந்து இருக்க சட்டம் ஒழுங்கு பாதுகாக்கப்படும்.
இலங்கை தமிழர்களுக்கு சம உரிமை, நீதி கிடைக்க தமிழக அரசு தொடர்ந்து முயற்சி மேற்கொள்ளும்.
தமிழ்நாடு விஷன் 2023-ன் படி தொடர்ந்து வழி நடத்தப்படும்.
விவசாயம் மற்றும் விவசாயிகள் முன்னேற்றத்தில் தொடர்ந்து தனி கவனம்.
விவசாயிகளின் வருமானத்தை உயர்த்த புதிய திட்டங்கள் உருவாக்கப்படும்.
விவசாயிகளின் உற்பத்திக்கு உரிய விலை கிடைக்க நடவடிக்கை. கால்நடை பராமரிப்பு துறையையும் மேம்படுத்த புதிய திட்டங்கள் உருவாக்கப்படும்.
புதிய கால்நடை மருத்துவமனைகள் அமைக்கப்படும்.
மீனவர் நலன் காக்க புதிய மீன்பிடி துறைமுகங்கள் அமைக்கப்படும்.
மீன்பிடி தடைக்காலத்தில் தொடர்ந்து உதவித்தொகை வழங்கப்படும்.
ஆழ்கடல் மீன்பிடிப்புக்கு புதிய திட்டங்கள் உருவாக்கப்படும்.
இலங்கை அரசால் தமிழக மீனவர்களுக்கு ஏற்படும் பாதிப்புகளை களைய நடவடிக்கை.
கச்சத்தீவை மீட்க தொடர்ந்து தீவிர நடவடிக்கை எடுக்கப்படும்.
ரேஷன் கடைகள் கணினி மயமாக்கப்படும்.
அம்மா உணவகம், அம்மா மருந்தகம் போன்ற திட்டங்கள் விரிவாக்கப்படும்.
தமிழக அரசின் தொடர் நடவடிக்கையால் தமிழகம் மின்மிகை மாநிலமாக விளங்குகிறது.
-ஆர்.அருண்கேசவன்.