ஆந்திர மாநில காவல்துறையில் கூடுதல் கண்காணிப்பாளராக இருந்த கே. சசிகுமார் ஐ.பி.எஸ், தனது கைத்துப்பாக்கி வெடித்ததில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
தமிழகத்தைச் சேர்ந்தவர் கே. சசிகுமார் ஐ.பி.எஸ், ஆந்திர மாநில காவல்துறையில் கூடுதல் கண்காணிப்பாளராக பணியாற்றி வந்தார்.
ஆந்திர மாநிலம், விசாகப்பட்டிணத்தில், படேரு என்ற இடத்தில் உள்ள காவல்துறை அலுவலகத்தில் இன்று காலை 6 மணியளவில், தனது கைத்துப்பாக்கியை சுத்தம் செய்து கொண்டிருந்தபோது அது எதிர்பாராதவிதமாக வெடித்ததில், அவரது தலையில் துப்பாக்கிக் குண்டு பாய்ந்து சசிகுமார் கடுமையாக காயமடைந்ததாக நேரில் பார்த்த காவல்துறை அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.
ஆனால், சசிகுமார் வைத்திருந்த கைத்துப்பாக்கி கைத்தவறி வெடித்ததா? (அல்லது) அவர் தற்கொலை செய்து கொண்டாரா? என்ற சர்ச்சை தற்போது எழுந்துள்ளது. பிரேதப் பரிசோதனை அறிக்கை கிடைத்த பிறகுதான் உண்மை தெரிய வரும்.
-எஸ்.சதிஸ்சர்மா.