தமிழ்நாட்டில், நாங்கள் மீண்டும் ஆட்சிக்கு வந்தால் படிப்படியாக மதுக்கடைகளை மூடுவோம் என்று சட்டசபை தேர்தலின் போது ஜெ.ஜெயலலிதா வாக்குறுதி அளித்தார்.
அதன்படி, அ.தி.மு.க. மீண்டும் ஆட்சிக்கு வந்ததும் முதலமைச்சராக பொறுப்பு ஏற்ற ஜெ.ஜெயலலிதா, மதுக்கடைகளின் விற்பனை நேரம் குறைக்கப்படும் என்றும், முதல் கட்டமாக 500 டாஸ்மாக் கடைகள் அடையாளம் காணப்பட்டு மூடப்படும் என்றும் அறிவித்தார்.
இதைத்தொடர்ந்து, கடந்த மாதம் 24-ந் தேதி முதல் மதுக்கடைகளின் விற்பனை நேரம் குறைக்கப்பட்டது.
இப்போது, தமிழகம் முழுவதும் மூடப்படும் 500 மதுக்கடைகள் அடையாளம் காணப்பட்டு அறிவிக்கப்பட்டு உள்ளன.
இதுபற்றி தமிழக அரசு பிறப்பித்துள்ள உத்தரவில் கூறப்பட்டு இருப்பதாவது:-
தமிழக அரசு பிறப்பித்த உத்தரவின்படி, 24.05.2016-ந் தேதி முதல் டாஸ்மாக் சில்லரை மதுபான கடைகளின் விற்பனை நேரமும், அவற்றுடன் இணைந்த பார்கள் செயல்படும் நேரமும் குறைக்கப்பட்டன. அதன்படி தற்போது நண்பகல் 12 மணி முதல் இரவு 10 மணி வரை மதுக்கடைகள் செயல்படுகின்றன. முன்பு இந்த கடைகள் காலை 10 மணி முதல் இரவு 10 மணி வரை திறந்து இருந்தன.
அடுத்த கட்டமாக, மூடப்படும் 500 டாஸ்மாக் கடைகளை அடையாளம் காணுமாறு அரசு உத்தரவிட்டு இருந்தது. மாவட்ட கலெக்டர்கள், டாஸ்மாக்கின் மூத்த மண்டல மேலாளர்கள் வழங்கிய சிபாரிசுகள், டாஸ்மாக் நிறுவனத்தின் மாவட்ட மேலாளர்கள் தாக்கல் செய்த விவரங்களை ஆய்வு செய்து மூடப்படும் 500 மதுக்கடைகளின் பட்டியல் தயாரிக்கப்பட்டு உள்ளது.
இந்த 500 கடைகள் இன்று (19.06.2016) முதல் மூடப்படுகின்றன. மூடப்படும் மதுக்கடைகளில் பணிபுரிந்த ஊழியர்களை வேறு இடங்களில் பணியில் அமர்த்துவதற்கான உத்தரவு விரைவில் பிறப்பிக்கப்படும்.
மூடப்படும் கடைகளில் கையிருப்பில் உள்ள சரக்கு குடோன்களுக்கு திருப்பி அனுப்பப்படும். அங்குள்ள மரச்சாமான்கள், பில் போடும் மெஷின்கள், மற்றும் அந்த கடைகள் தொடர்பான ஆவணங்கள் உள்ளிட்டவை சம்பந்தப்பட்ட மாவட்ட மேலாளர்களிடம் ஒப்படைக்கப்பட்டு பின்னர் சரிபார்க்கப்படும்.
மூடப்படும் டாஸ்மாக் கடைகள் செயல்பட்ட சில கட்டிடங்களின் உரிமையாளர்களுக்கு வழங்கப்பட்ட முன்பணத்தை அவர்களிடம் இருந்து சம்பந்தப்பட்ட மாவட்ட மேலாளர்கள் உடனடியாக வசூலிப்பார்கள்.
கடைகள் மூடப்பட்டது உறுதி செய்யப்பட்டு அதற்கான சான்றிதழ் சம்பந்தப்பட்ட தணிக்கையாளரிடம் இருந்து பெறப்பட வேண்டும்.
மேற்கண்ட அறிவுறுத்தல்களை தவறாமல் பின்பற்றுமாறு சம்பந்தப்பட்ட அனைத்து அதிகாரிகளும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இது தொடர்பாக தாங்கள் மேற்கொண்ட நடவடிக்கைகள் குறித்து அவர்கள் விரிவான அறிக்கையை அனுப்பி வைக்கவேண்டும். மேற்கண்ட அறிவுறுத்தல்கள் தவறாமல் நிறைவேற்றப்படுவதை உறுதி செய்யுமாறு மாவட்ட கலெக்டர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.இவ்வாறு அந்த உத்தரவில் கூறப்பட்டு உள்ளது.
மூடப்படும் மதுக்கடைகளின் விவரம் வருமாறு:-
சென்னை மண்டலம்
சென்னை வடக்கு – 2
மத்திய சென்னை – 3
சென்னை தெற்கு – 2
காஞ்சீபுரம் வடக்கு – 13
காஞ்சீபுரம் தெற்கு – 3
திருவள்ளூர் கிழக்கு – 16
திருவள்ளூர் மேற்கு – 19
மொத்தம் – 58
கோவை மண்டலம்
கோவை வடக்கு – 1
கோவை தெற்கு – 4
திருப்பூர் – 8
ஈரோடு – 16
நீலகிரி – 31
மொத்தம் – 60
மதுரை மண்டலம்
மதுரை தெற்கு – 21
மதுரை வடக்கு – 16
திண்டுக்கல் – 10
ராம்நாடு – 36
விருதுநகர் – 27
சிவகங்கை – 43
நெல்லை – 9
தூத்துக்குடி – 30
கன்னியாகுமரி – 6
தேனி – 3
மொத்தம் – 201
திருச்சி மண்டலம்
திருச்சி – 14
நாகப்பட்டினம் – 16
தஞ்சாவூர் – 16
புதுக்கோட்டை – 14
கடலூர் – 15
கரூர் – 14
திருவாரூர் – 8
விழுப்புரம் – 29
பெரம்பலூர் – 7
மொத்தம் – 133
சேலம் மண்டலம்
சேலம் – 0
தர்மபுரி – 1
கிருஷ்ணகிரி – 6
நாமக்கல் – 11
வேலூர் – 8
திருவண்ணாமலை – 18
அரக்கோணம் – 4
மொத்தம் – 48
தமிழக முதலமைச்சர் ஜெ.ஜெயலலிதா இன்று சொன்னதை செய்தார்; இனி சொல்லாததையும் செய்வார்.
-டாக்டர் துரைபெஞ்சமின்.
ullatchithagaval@gmail.com