கர்நாடக அமைச்சரவையில் இருந்து 14 பேரை நீக்க முடிவு செய்த கர்நாடக முதல்வர் சித்தராமையா, காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி ஒப்புதலின் பேரில், கர்நாடக அமைச்சரவையை மாற்றியமைத்தார்.
இதற்கான பட்டியலை பெங்களூருவில் இன்று ஆளுநர் வஜுபாய்வாலாவிடம் அளித்தார். அதை ஏற்றுக்கொண்ட ஆளுநர் வஜுபாய்வாலா, 14 அமைச்சர்களை அமைச்சரவையில் இருந்து நீக்கப்பட்டதற்கான உத்தரவை பிறப்பித்தார். மேலும், புதிதாக 13 பேரை அமைச்சரவையில் சேர்த்துக்கொள்ளவும் அனுமதி அளித்தார்.
பதவி நீக்கம் செய்யப்பட்ட அமைச்சர்கள் விபரம்:
இதையடுத்து பெங்களூரு, ஆளுநர் மாளிகையில் உள்ள கண்ணாடி மாளிகையில் இன்று (19.06.2016) மாலை 4 மணிக்கு புதிய அமைச்சர்கள் பதவியேற்பு விழா எளிமையான முறையில் நடைப்பெற்றது.
இதில் காகோடு திம்மப்பா, கே.ஆர்.ரமேஷ்குமார், பசவராஜ் ராயரெட்டி, எச்.ஒய்.மேட்டி, தன்வீர்சேட், எஸ்.எஸ்.மல்லிகார்ஜுன், எம்.ஆர்.சீத்தராமன், சந்தோஷ்லாட், ரமேஷ் ஜார்கிஹோளி ஆகிய 9 பேருக்கும் கேபினெட் அமைச்சர்களாகவும், பிரமோத் மத்வராஜ், ஈஸ்வர்கண்ட்ரே, ருத்ரப்பா லாமணி, பிரியாங்க் கார்கே ஆகிய 4 பேருக்கும் இணை அமைச்சர்களாகவும், ஆளுநர் வஜுபாய்வாலா பதவி பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார்.
புதிதாக பதவியேற்ற அமைச்சர்களுக்கு ஆளுநர் வஜுபாய்வாலா, முதல்வர் சித்தராமையா ஆகியோர் மலர்க் கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தனர்.
20 நிமிடங்கள் மட்டுமே நடந்த பதவியேற்பு நிகழ்ச்சியில் மக்களவை காங்கிரஸ் குழுத்தலைவர் மல்லிகார்ஜுனகார்கே, அமைச்சர்கள் டி.பி.ஜெயசந்திரா, கே.ஜே.ஜார்ஜ், ரோஷன்பெய்க், ராமலிங்கரெட்டி, கிருஷ்ண பைரே கௌடா, தலைமைச்செயலாளர் அரவிந்த்ஜாதவ், கர்நாடக காவல்துறை தலைவர் ஓம்பிரகாஷ், பெங்களூரு மாநகர காவல் ஆணையர் மேகரிக் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.
புதிய அமைச்சர்கள் பதவியேற்றுக் கொண்டதும், பெங்களூரு, விதானசௌதாவில் இன்று மாலை 5 மணிக்கு முதல்வர் சித்தராமையா தலைமையில் அமைச்சரவைக் கூட்டம் நடந்தது. இதில் புதிய அமைச்சர்களுக்கு வாழ்த்து தெரிவித்துக் கொண்ட சித்தராமையா, திறம்பட பணியாற்றுமாறும், அடுத்த சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸ் மீண்டும் ஆட்சியமைக்கும் வகையில் நமது அரசின் செயல்பாடுகள் அமைய வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
இந்நிலையில் 14 பேர் நீக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து, நீக்கப்பட்ட அமைச்சர்களின் ஆதரவாளர்கள் பல இடங்களில் வன்முறையிலும், போராட்டத்திலும் ஈடுபட்டு வருகின்றனர். கலபுரகி என்ற இடத்தில் பதவி பறிக்கப்பட்ட அமைச்சர் கம்ரூன் இஸ்லாம் என்பவரது ஆதரவாளர்கள் பஸ்சுக்கு தீ வைத்தனர். தொடர்ந்து பல இடங்களில் வன்முறை நடைப்பெற்று வருகிறது.
-டாக்டர் துரைபெஞ்சமின்.
ullatchithagaval@gmail.com