அரசு பள்ளியில் யோகா தினம் கொண்டாட்டம்.

IMG20160621154739 - Copy IMG20160621155352 - Copy

திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அடுத்த மேல்பென்னாத்தூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் இரண்டாம் ஆண்டு ‘சர்வதேச யோகா தினம்’ சிறப்பாக கொண்டாடப்பட்டது.

விழாவிற்கு மேல்பென்னாத்தூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் இரா.ஜெயந்தி தலைமை தாங்கினார். பட்டதாரி ஆசிரியர் ச.வேல்முருகன் முன்னிலை வகித்தார்.

யோக தினத்தையொட்டி பள்ளி ஆசிரியர்கள் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். அனைத்து மாணவர்களும் ஆர்வத்துடன் பங்கேற்று யோகாசனம் செய்தனர். சிறப்பாக செய்த  மாணவ, மாணவிகளுக்கு பள்ளி தலைமை ஆசிரியர் இரா.ஜெயந்தி பரிசுகளை வழங்கினார். பள்ளி ஆசிரியர்கள் த.சங்கீதா, கு.தனலெட்சுமி, ச.நாராயணன், பூ.ஜோதி, அமலிஜெரினா, ரேகா, மகேஸ்வரி, ஆறுமுகம், ராஜா ஆகியோர் பங்கேற்று செய்தனர்.

முடிவில் உடற்கல்வி ஆசிரியர் மா.சரவணக்குமார் நன்றி கூறினார்.

 – செங்கம் சரவணக்குமார்.