அத்துமீறும் ஆந்திர அரசு! எச்சரிக்கும் தமிழக முதல்வர்!-பாலாறு தடுப்பணை விவகாரம்.

பாலாறுபாலாற்றின் குறுக்கே தடுப்பணை கட்டும் ஆந்திரா

தமிழக – ஆந்திர எல்லையில் பாலாற்றின் குறுக்கே தடுப்பணை கட்டும் ஆந்திராவிற்கு எதிராக போராட்டம் நடத்தப்படுகிறது.

வேலூர் மாவட்டம், வாணியம்பாடியை அடுத்த தமிழக – ஆந்திர எல்லைப்பகுதியான புல்லூரி கிராமத்தில் பாலாற்றின் கரையோரத்தில் பழமை வாய்ந்த ‘கனக நாச்சியம்மன் கோவில்’ உள்ளது. இந்த கோவிலை புல்லூர், திம்மாம்பேட்டை, ஆவாரங்குப்பம் ஆகிய ஊராட்சிகளை சேர்ந்த பொதுமக்கள் பராமரித்து வருகின்றனர்.

மேலும், தமிழக அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் இக்கோவில் இயங்கி வருகிறது. இந்த கோவிலுக்கு வாணியம்பாடி, நாட்டறம்பள்ளி, திருப்பத்தூர், ஆம்பூர் மற்றும் ஆந்திர மாநில பகுதியில் இருந்து தினந்தோறும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர்.

கோவிலின் அருகே தமிழக – ஆந்திர எல்லையான பாலாற்றின் குறுக்கே ஆந்திர அரசு சில ஆண்டுகளுக்கு முன்பு சிறிய அளவில் தடுப்பணை கட்டியது. அதன்பிறகு 5 அடியாக தடுப்பு சுவராக எழுப்பி தண்ணீரை தேக்கியது.

இந்நிலையில் சுமார் ரூ.45 லட்சம் மதிப்பில் 10 அடிக்கும் மேலாக தடுப்பு சுவர் எழுப்பி கடந்த சில நாட்களாக ஆந்திர அரசு பணியை தொடங்கி கட்டி வருகிறது. ஆந்திர எல்லையில் இருந்து தமிழக எல்லைக்குள் நுழையும் பாலாற்றில் வழிந்தோடும் நீரை நம்பி தமிழக பகுதியில் சுமார் 2 ஆயிரம் ஏக்கர் அளவிலான விவசாய நிலம் பாசன வசதி பெற்று வந்தது.

இந்நிலையில் தற்போது 5 அடியாக இருந்த தடுப்பு சுவர் 10 அடிக்கும் மேலாக உயர்த்தி கட்டி வருவதால் இனிமேல் பாலாற்றில் வழிந்தோடும் தண்ணீரும் நின்றுவிடுமென தமிழக விவசாயிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். மேலும், இக்கோவில் பாலாற்றின் நடுவில் அமைந்துள்ளதால் தற்போது எழுப்பியுள்ள தடுப்பு சுவரால் திடீரென வெள்ளம் வந்தால் கோவில் தண்ணீரில் மூழ்கும் அபாயமும் ஏற்பட வாய்ப்புள்ளதாக பொதுமக்கள் கூறுகின்றனர்.

jj

pr010716_315

இந்நிலையில், ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவுக்கு, தமிழக முதல்வர் ஜெ.ஜெயலலிதா ஒரு கடிதம் எழுதியுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

ஆந்திர மாநிலம், சித்தூர் மாவட்டத்தில், பெரும்பள்ளம் கிராமத்தில் பாலாற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள தடுப்பணையின் உயரத்தை 5 அடியில் இருந்து 12 அடியாக அதிகரிக்கும் நடவடிக்கையில் ஆந்திர நீர்ப்பாசனத்துறை ஈடுபட்டுள்ளதை தங்களின் கவனத்திற்கு கொண்டு வருகிறேன்.

பாலாறு மாநிலங்களுக்கிடையே ஓடும் ஆறு என்பதால் ஆந்திர அதிகாரிகளின் ஒருதலைப்பட்சமான நடவடிக்கை தமிழகத்தில் அச்ச உணர்வை ஏற்படுத்தியுள்ளது.

பாலாறு மாநிலங்களுக்கிடையே ஓடும் ஆறு என்பதால் அட்டவணை ‘அ’-வில் 1892 ஆண்டின் ஒப்பந்தத்தில் இணைக்கப்பட்டுள்ளது. இந்த ஒப்பந்தத்தின் 2-வது உட்பிரிவின் படி மேல் பாசன மாநிலங்கள் கீழ் பாசன மாநிலங்களின் அனுமதியின்றி ஆற்றின் குறுக்கே புதிய அணைகளையோ அல்லது ஆற்றின் நீரை திருப்பும், தடுக்கும், சேமிக்கும் எந்த விதமான கட்டுமானங்களையோ கட்டக் கூடாது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

எனவே, பாலாற்றின் குறுக்கே அணை கட்டுவது 1892-ல் போடப்பட்ட ஒப்பந்தத்தை மீறும் செயல் என்பதால், இதனை எதிர்த்து தமிழக அரசு சார்பில் 2006-ல் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இந்நிலையில், பெரும்பள்ளம் கிராமத்தில் பாலாற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள தடுப்பணையின் உயரத்தை அதிகரிக்கும் ஆந்திர அரசின் ஒரு தலைப்பட்சமான நடவடிக்கைக்கு தமிழக அரசு தனது கடும் எதிர்ப்பை தெரிவிக்கிறது.

அத்துடன், இந்த விஷயத்தில் தாங்கள் உடனடியாக தலையிட்டு, தடுப்பணையை உயர்த்தும் நடவடிக்கையை தடுக்கவும், தடுப்பணையில் நீர்மட்டத்தைக் குறைக்கவும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு தமிழக முதல்வர் ஜெ.ஜெயலலிதா தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

மைசூர், மெட்ராஸ் ராஜ்ஜியங்கள் இடையில் நதிநீர் பங்கீடு மற்றும் நீர்பாசன ஏரிகளை புனரமைப்பது தொடர்பாக 1892-ம் ஆண்டு பிப்ரவரி 18-ல் கையெழுத்தான ஒப்பந்தம், நமது வாசர்களின் பார்வைக்காக இங்கு பதிவு செய்துள்ளோம்.

Schedule “A” annexed to the Madras-Mysore Agreement, 1892

9102 9103 9104 

-டாக்டர் துரைபெஞ்சமின்.

ullatchithagaval@gmail.com