சென்னையில் இன்று அ.தி.மு.க. சார்பில் இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. நந்தம்பாக்கம், மவுண்ட் பூந்தமல்லி சாலையில் உள்ள “சென்னை வர்த்தக மைய வளாகத்தில்” உள்ள கன்வென்சன் ஹாலில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் தமிழக முதலமைச்சர் ஜெ.ஜெயலலிதா கலந்துகொண்டார்.
அ.தி.மு.க. சார்பில் 20-வது ஆண்டாக நடைபெறும் இந்த இப்தார் விருந்து நிகழ்ச்சியில் அரசு தலைமை காஜி சலாவுதீன் முகமது அயூப், அமைச்சர்கள், அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள், மற்றும் அ.தி.மு.க. கூட்டணி கட்சி தலைவர்கள் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
-ஆர்.அருண்கேசவன்.