தெலுங்கானா மாநிலம், அடிலாபாத் மாவட்டம், பைன்சியா பகுதி, கோபால் நகர் காலனியை சேர்ந்தவர் சந்தியா(19). இவர் ஒரு பள்ளியில் படித்து வருகிறார். அதே பகுதியை சேர்ந்த மாணவன் மகேஷ்(20). இவன் சந்தியாவை ஒரு வருடம் பின்தொடர்ந்துள்ளான்.
இவன் பல முறை தனது காதலை சந்தியாவிடம் வெளிப்படுத்தியுள்ளான். தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு வலியுறுத்தியுள்ளான். ஆனால், சந்தியா காதலை ஏற்கவில்லை.
இந்நிலையில் 02.06.2016 மதியம் 2-30 மணிக்கு சந்தியா வீட்டு அருகே உள்ள கடைக்கு சென்றார். அங்கு நின்று கொண்டிருந்த மகேஷ் அவரிடம் மீண்டும் காதலிக்கும்படி வற்புறுத்தினார்.
தனக்கு திருமண ஏற்பாடு நடக்கிறது. என் பின்னால் சுற்றாதே என்று சந்தியா கண்டித்தார். இதனால் ஆத்திரமுற்ற மகேஷ், சந்தியா வீட்டின் அருகே சென்று கொண்டிருந்த போது, கத்தியால் கழுத்தை அறுத்தான். சந்தியா சம்பவ இடத்திலேயே துடித்துடிக்க உயிரிழந்தார்.
சந்தியாவின் உடலை பார்த்து பெற்றோர்கள் கதறி அழும் காட்சி, பார்த்த நெஞ்சங்களை பதற வைத்தது.
தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த போலீஸார், கொலையாளி மகேஷை கைது செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
-எஸ்.சதிஸ்சர்மா.