முக்கிய குறிப்பு : இக்கட்டுரையில் வரும் கருத்துக்கள் அனைத்தும் நமது முன்னோர்கள் எழுதிவைத்த சுவடிகளில் இருந்து எடுக்கப்பட்ட குறிப்பாகும். இதில் ஜாதி, இனம் பற்றிய குறிப்புகள் சுவடியில் உள்ளது உள்ளவாரே சொல்லப்பட வேண்டும் என்ற நோக்கத்தில் இக்கட்டுரையில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் யாரையும் எந்த இனத்தையும் குறைத்து மதிப்பிடுவதோ குறைகூறுவதோ எமது நோக்கம் அல்ல.
பாம்புகளின்உற்பத்தியும்இனங்களும்
ஆனி மாதத்தில் அனைத்து இன பாம்புகளும் புணரும். அதன் பின்னர் கரு வளர்ச்சி அடைய ஐந்து மாதங்கள் ஆகும். ஆவணி, ஆடி முதலான மாதங்களிலும் இவை கருகொள்வதனால் அவைகள் இளைக்கும். கார்த்திகை மாதம் முட்டையிடும். பின்னர் 7 நாட்கள் அடைக்காக்கும். 248 முட்டைகளில் 228 முட்டைகளை அடைகாத்த 7 நாட்களுக்குள் உண்டு விடும். 4 முட்டைகள் அழிந்து போகும். மீதம் உள்ள 16 முட்டைகளைப் பொரித்து குட்டிகள் ஊறும். அக்குட்டிகளுக்கு மயிரிலைப் போல 24 கால்கள் உண்டு. 28 நாட்கள் சென்ற பின்னர், அவை சூரியனை நோக்கி ஆடி நஞ்சைப் பெற்றுக் கொள்ளும். விரியன் பாம்புகளில் இருந்து தேள் முதலானவைகள் ஜனிக்கும். 20-ம் நாள் சட்டை கழற்றும். அப்போது விரியன் பாம்பின் முதுகு விரிந்து தேள், சிலந்தி முதலானவை ஜனிக்கும்.
பாம்பின் ஜாதிகள்: பிராமண பாம்புகள் செந்நிறமாக இருக்கும். அரச ஜாதி எனில் பொன்நிறமாக இருக்கும். வணிக ஜாதி பாம்பு எனில் வெண்நிறமாக இருக்கும். சூத்திர ஜாதி பாம்பு எனில் கறுப்பு நிறமாக இருக்கும். பிராமன ஜாதி பாம்புகள் தேவ ஆலயங்களிலும்;, சத்திரிய ஜாதி பாம்புகள் மரங்களிலும், வைசிய ஜாதி பாம்புகள் வீடுகளிலும், சூத்திர ஜாதி பாம்புகள் புற்றுகளிலும் வாழும். மறையோன் ஜாதி பாம்புகள் காற்றை மட்டும் புசிக்கும். அரச ஜாதி பாம்புகள் புஷ்பங்களின் வாசனை, தாதுக்கள் முதலானவை உட்கொள்ளும். வணிக ஜாதி பாம்புகள் எலி, மூஞ்சூறு முதலியன உட்கொள்ளும். உழவ ஜாதி பாம்புகள் தவளை, மீன் முதலானவை உட்கொள்ளும். பிராமண ஜாதி பாம்புகள் வானை நோக்கி ஆடும். சத்திரிய ஜாதி பாம்புகள் பக்கம் பார்த்து ஆடும். வணிக ஜாதி பாம்புகள் எதிராளியின் பாதங்களை நோக்கி ஆடும். உழவ ஜாதி பாம்புகள் பூமியைப் பார்த்து ஆடும். பாம்பின் படத்தில் சங்கு, சக்கரம், வில் போன்ற உருவங்கள் முறையே பிராமண, சத்திரிய, வைசிய, சூத்திர ஜாதி பாம்புகளில் காணப்படும்.
பாம்பு சாதாரணமாக இருக்கும் போது விஷம் தலையில் தங்கி இருக்கும். படமெடுத்து ஆடும் போது விஷம் பாம்பின் கடைக்கண்ணில் தங்கும். கடித்தால் கடிவாயில் விஷம் 98 மாத்திரைக் காலம் தங்கும். நாகம் தேள், வழலை, நீர்ப்பாம்பு, மண்டெலி, மண் பாம்பு, சாரை, நல்ல பாம்பு, எறும்பு, அரும்புள்ளி பூரான், அரணை, சிறு பாம்பு, முதலியன ஆகும்.
பாம்பு கடி சொல்ல வரும் தூதுவனின் லட்சணங்கள்: பெரிதான கொடி, யானை இவைகளுடன் தெற்கு திசை பார்த்து ஒரு தூதன் வந்தால் கரு நாகம் தீண்டி இருக்கிறது என கொள்ளலாம். தென் கிழக்கு திசை பார்த்து ஒரு தூதன் சொன்னால் வழலைப் பாம்பு கடித்து இருக்கிறது என அர்த்தம். தென் மேற்கு திசை பார்த்து ஒரு தூதன் சொன்னால் மண்டலிப் பாம்பு கடித்து இருக்கிறது என அர்த்தம். வடமேற்கு பார்த்து சொன்னால் கழுதை விரியன் என்றும், வடகிழக்கு பார்த்து சொன்னால் விரியன் என்றும் தெரிந்து கொள்ளலாம். கிழக்கு, மேற்கு, வடக்கு, தெற்கு பார்த்து சொன்னால் நோயாளி பிழைப்பான். மற்ற திசைப் பார்த்து சொன்னால் நோயாளி இறப்பான். பாம்பு கடிபட்டவனின் கடிவாயில் பாதிரிப்பூ மணம் வீசினால் வழலை பாம்பு என தெரிந்து கொள்ளலாம். தாழம்பூ மணம் வீசினால்; நல்ல பாம்பு என தெரிந்து கொள்ளலாம். புளியம்பூ மணம் வீசினால்; விரியன் கடித்தது என தெரிந்து கொள்ளலாம். மல்லிகை பூ மணம் வீசினால்; மண்டெலி கடித்தது என தெரிந்து கொள்ளலாம். பாம்பின் கடிவாயில் நுகரும் போது யாதொரு தனிப்பட்ட வாசனையும் இல்லை எனில் யாதொரு விஷம் இல்லை என தெரிந்து கொள்ளலாம். வருகின்ற தூதன் பாம்பின் பெயரை முன்னே சொல்லி வைத்தியனை அழைத்தால் கடி உண்டவன் இறப்பான் என தெரிந்து கொள்ளலாம். பாம்பின் பெயரை பின்னர் உரைத்தால் கடிப்பட்டவனுக்கு விஷத்தால் எந்த பயமில்லை. கடிவாயில் வெண்மையாக இருந்தால் 1 பல் பட்டது என்றும், செம்பொன் நிறமாக இருந்தால் 2 பல் பட்டது என்றும், சிகப்பு நிறமாக இருந்தால் 3 பல் பட்டது என்றும், கறுப்பு நிறமாக இருந்தால் 4 பல் பட்டது என தெரிந்து கொள்ளலாம். தூதுவன் உரைத்த சொற்களை கூட்டி மூன்று கூறாக்கி பாக்கி உள்ள எழுத்து 1 எனில் விஷம் உண்டு. ஆனால் பிழைத்து விடுவான். 3 என வந்தால் கடியுண்டவன் கட்டாயம் இறப்பான். வைத்தியர் தன்னுடைய சரம் நடக்கும் திசையிலிருந்து வலமோ, இடமோ தூதுவன் வந்து எதிர் திசையில் வந்து நின்றால் பாம்பு கடிபட்டவன் உயிர் பிழைக்க மாட்டான். வைத்தியரின் மூச்சுக் காற்று நடப்பதின் எதிர்திசையிலிருந்து தூதன் வந்து மூச்சுக்காற்று நடக்கும் திசையில் வந்து நின்றுகொண்டாலும் கடியுண்டவன் இறப்பான். வைத்தியனுக்கு சுழுமுனை நாடி ஒடிக்கொண்டு இருக்கும் போது தூதன் வந்து அழைத்தால் பாம்பு கடித்தவன் பிழைப்பான்.விஷம் மிகுதியாகும் சந்தர்பங்கள்: தெய்வசன்னதி(கோவில்) அரசமரம், புளியமரம், முச்சந்தி, சுடுகாடு, குளத்தாங்கரை, வாய்கால்கரை, புற்று, கிணற்றடி முதலான இடங்களில் இருந்து மிக சாதரணமாக பாம்பு கடித்தால் கெடுதல் இல்லை. பாம்பு பலமாக கடித்தால் தான் ஆபத்தானது.பாம்பு கடிக்கக்கூடாத நட்சத்திரங்கள்: திருவாதிரை, பரணி, ஆயில்யம், பூரம், பூராடம், பூரட்டாதி, கேட்டை, விசாகம், சுவாதி, சித்திரை, மகம் ஆகிய நட்சத்திரங்களில் பாம்பு கடித்தவர்கள் மரணம் அடைவது நிச்சயம்.பாம்பு கடிக்கக் கூடாத இடங்கள்: உள்ளங்கை, உள்ளங்கால், தொடையிடுக்கு, நெற்றி, மார்பு, கழுத்து, புருவம், மூக்கு, நவ துவாரங்கள், தொப்புள் முதலான ஏதேனும் ஒரு இடத்தில் கோபத்துடன் கடித்தால் கருட பகவானே வந்தாலும் விஷத்தை போக்க முடியாது.ஒரு பல் மட்டும் கடிவாயில் பதிந்திருந்தால் பயப்பட தேவையில்லை. விஷம் சிறிய அளவில் இருக்கும். 2 பல் பதிந்திருந்தால் மந்திரத்தினால் விஷம் மீளும். 3 பல் பதிந்திருந்தால் மருந்தினால் தீரும். 4 பல் பட்டால் எந்த தேவர், முனிவர், கடவுள் வந்தாலும் விஷம் இறங்காது. பாம்பு கடித்த இடத்தில் எரிச்சலுடன் வலி, வீக்கம் இருந்தாலும், கடித்த இடத்தில் இருந்து ஊண்நீர் வடிந்தாலும் விஷம் நீங்காது. நோயாளிக்கு அதிகமாக நாவரட்சி ஏற்பட்டாலும், மருந்துகளை கொடுக்கும் போது அவை உட்செல்லாமல் வாந்தியானாலும் கடியுண்டவன் பிழைக்க மாட்டான், மந்திரங்களும் பலிக்காது. பாம்பு கடியுண்டவவனின் கண்கள் சிவந்து, பற்கள் முகம் இவை கருநிறமாகவும், கழுத்து நிலைநிற்காமலும் இருந்தால் அவன் பிழைப்பது அரிது. கடியுண்டவன் நிலை தடுமாறி போனாலும் மலமும் மூத்திரமும் சிவந்து இறங்கினாலும் இறப்பது நிச்சயம். முதல் வேகம் உடலும், மனதும் தனியாகவும். இரண்டாம் வேகம் வேர்வை உண்டாகும். உடம்பு கண்றிப் போகும். வேகம் என்பது உடலில் பாம்பு விஷம் பரவ பரவ அதனால் உண்டாகும் குறிகள். இவை பாம்புகடி விஷத்தின் அளவிற்கு தக்கபடி வெகு சீக்கிரமாகவோ அல்லது சிரமமாகவோ உண்டாகும். அண்டகோசத்தில் புண்கள் உண்டாகி, வாய் உட்புறம் வெந்து போய் கண் விழியும் அசைவின்றி நின்று விட்டால் உயிர் போய் விட்டது என்று தெரிந்து கொள்ளலாம். கடியுண்டவன் பிழைத்து விடுவான் என்று தவறாக நினைக்க வேண்டாம். கண்கள் சிவந்து கையும், கழுத்தும் நிற்காமல் விழுந்து விட்டாலும், வாய் உமிழ் நீர் உலர்ந்து விட்டாலும், எகிர், பற்கள் முதலானவை கருநிறமானாலும், அவன் பிழைப்பது அரிது. ஹனுமானே சஞ்சீவியை கொண்டு வந்தாலும் பிழைக்க வைக்க முடியாது. தலையில் கீறும் போது இரத்தம் வெளியானாலும், சிரத்தில் உள்ள மயிரை இழுக்கும் போது அது முறிந்தாலும், கை கால்கள் நெட்டி வந்தாலும், உயிர் இருக்கிறது என்று தெரிந்து கொள்ளலாம்.தீபத்தில் ஒளிச்சுடரை பார்க்கும் போது, அச்சுடர் மேல் நோக்கி வந்தால், உயிர் மேல் நோக்கியும், தலைகீழாக தெரிந்தால், உயிர் தலைகீழாகவும், பக்கவாட்டில் தெரிந்தால், உயிர் பக்கவாட்டிலும், நேராக தெரிந்தால், உயிர் நேராகவும் இருக்கும் என்று தெரிந்து கொள்ளலாம்.
பாம்பு
கடித்தவனை கடித்த இடத்தில் பிரம்பால் அடித்தால், அந்த இடம் வீங்கினாலும், உடல் சிவந்தாலும், வியர்வை உண்டாகி குளிர்ந்து கூசினாலும், 9 நாடிகளும் சிவந்தாலும் உயிர் போகவில்லை என்று தெரிந்து கொள்ளலாம். வழலைப் பாம்பு கடித்த இடத்தில் இரத்தம் தொடர்ந்து வரும், நாக்கு வழவழப்பாக இருக்கும். விரியன் பாம்பு கடித்தால் இரத்தத்துடன் துர்நீர்றும் கசியும். கண்ணாடி விரியன் பாம்பு கடித்தால் கடிவாயில் தாங்க முடியாத அலர்ஜி உண்டாகும். பெரியபூராண்(சியான்) கடித்தால் சிறுநீர் மஞ்சலாக இருக்கும். இந்த சர்ப விஷங்களையும் சேர்த்து தான் வியாதியினுடைய எண்ணிக்கை 4448 எனபட்டியலிட்டுள்ளார்கள்.ஆதாரம் : தன்வந்திரி வைத்தியம் ஸர்ப்ப விஷ நிதானம். பாடல் : 1-33.