கர்நாடக மாநிலத்தில் துணை போலீஸ் சூப்பிரண்டு தூக்குப்போட்டு தற்கொலை!  

துணை போலீஸ் சூப்பிரண்டு M.K.கணபதி.

துணை போலீஸ் சூப்பிரண்டு M.K.கணபதி.

DSP GANAPATHY SUSIDE  SRI VINAYAKA LODGE IN MADIKERI KA

கர்நாடக மாநிலம், குடகு மாவட்டம், சோமவார்பேட்டை தாலுகா, குசால் நகர் அருகே ராமசமுத்திரா கிராமத்தை சேர்ந்தவர் கணபதி, இவர் தட்சிணகன்னடா மாவட்டம் மங்களூருவில் உள்ள மேற்கு மண்டல போலீஸ் .ஜி. அலுவலக்தில் துணை போலீஸ் சூப்பிரண்டாக பணியாற்றி வந்தார்.

இந்நிலையில் 07.07.2016 காலை குடகிற்கு வந்த அவர், மடிகேரி டவுனில் உள்ள ஸ்ரீ வினாயகா தங்கும் விடுதியில் அறை எடுத்து தங்கியுள்ளார். பின்னர் அவர் போலீஸ் சீருடையை அணிந்துக் கொண்டு வெளியே சென்றுள்ளார். பிறகு அன்று மதியம் மீண்டும் தனது அறைக்கு வந்த அவர், அன்று மாலை வரை நீண்ட நேரமாக அவர் வெளியே வரவில்லை.

இதனால் சந்தேகமடைந்த ஸ்ரீ வினாயகா தங்கும் விடுதி ஊழியர்கள் அவரது அறைக்கு சென்று கதவை தட்டியுள்ளனர். ஆனால், அறை கதவு திறக்கப்படவில்லை. அப்போது துணை போலீஸ் சூப்பிரண்டு கணபதி, அறையில் இருந்த மின் விசிறியில் தூக்கில் தொங்கிய நிலையில் இருப்பது தெரியவந்தது.

இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். குடகு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜேந்திர பிரசாத், மடிகேரி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். அவரது உடலை போலீசார் கைப்பற்றினர். மேலும், அவர் தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பு எழுதிவைத்திருந்த கடிதம் போலீசாரிடம் சிக்கியுள்ளது.

இதுகுறித்து மடிகேரி போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

-எஸ்.சதிஸ்சர்மா.