இலங்கையில் முகாமிட்டிருக்கும் சீன வெளிவிவகார அமைச்சர்!

இலங்கை ஜனாதிபதி மைத்ரிபால சிறசேனவுடன், சீன வெளிவிவகார அமைச்சர் வேங் யீ.

இலங்கை ஜனாதிபதி மைத்ரிபால சிறசேனவுடன், சீன வெளிவிவகார அமைச்சர் வேங் யீ.

இலங்கைக்கு வருகை தந்துள்ள சீன வெளிவிவகார அமைச்சர் வேங் யீ,  இலங்கை ஜனாதிபதி மைத்ரிபால சிறசேனவை சந்தித்தார். அப்போது சீன அரசு வழங்கும் ஒத்துழைப்பினைப் பாராட்டி தனது நன்றிகளைத் தெரிவித்தார்.

எதிர்காலத்தில் இலங்கையின் சிறுநீரக நோயாளர்களுக்காக சீன அரசு ஒத்துழைப்பு வழங்கும் என இலங்கை ஜனாதிபதி மைத்ரிபால சிறசேன நம்பிக்கை தெரிவித்தார். எதிர்வரும் ஆண்டில் இலங்கைக்கும் சீனாவிற்குமிடையிலான இராஜதந்திர உறவுகளுக்கு 60 ஆண்டுகள் பூர்த்தியாவதாக குறிப்பிட்டார்.

இலங்கையிலிருந்து பயங்கரவாதத்தை இல்லாதொழிப்பதற்கு சீன அரசு வழங்கும் பங்களிப்பு மற்றும் சர்வதேச ரீதியில் இலங்கைக்கு வழங்கும் ஒத்துழைப்பு தொடர்பில் இலங்கை ஜனாதிபதி மைத்ரிபால சிறசேன தனது நன்றிகளைத் தெரிவித்தார்.

துறைமுக நகர கருத்திட்டத்தை மீண்டும் ஆரம்பிப்பதற்குப் பொருத்தமான சூழலை  ஏற்படுத்தியமை தொடர்பில் சீன அரசாங்கம் சார்பில் தனது நன்றிகளை இலங்கை ஜனாதிபதி மைத்ரிபால சிறசேனவிடம் தெரிவித்த சீன வெளிவிவகார அமைச்சர் வேங் யீ, எதிர்காலத்தில் இலங்கைக்கான சீன அரசின் ஒத்துழைப்பினைத் தொடர்ந்தும் வழங்குவதாக தெரிவித்தார்.

-வினித்.