நிதி மோசடி குற்றச்சாட்டு தொடர்பாக, கொழும்புவில் உள்ள நிதி ஆணைக் குழு முன்பு இன்று (11.07.2016) காலை ஆஜாரான நமால் ராஜபக்ஷவிடம், 70 மில்லியன் பண மோசடி தொடர்பாக அவரிடம் பல கேள்விகள் கேட்கப்பட்டது. விசாரணையின் முடிவில் நாமல் ராஜபக்சவை கைது செய்வதாக நிதி ஆணைக் குழு அறிவித்தது.
நாமல் ராஜபக்சவை கொழும்பு கோட்டை நீதிமன்றத்தில் ஆஜார்படுத்தினர். உடனே, அவரை ஜாமீனில் எடுப்பதற்கு மகிந்த ராஜபக்ஷ ஆட்கள் முயற்சித்தனர்.
ஆனால், ஜூலை 18-ம் தேதி வரை ஜாமீனில் வெளிவர முடியாதவாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதனால் நாமல் ராஜபக்ச சிறை வைக்கப்பட்டுள்ளார்.
-வினித்.