வழக்கறிஞர் மணிமாறனை, மகன் ராஜேஷ் அரிவாளால் வெட்டினார்!-சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் நடந்த கொடுமை.  

advocate manimaran in chennai.1 advocate manimaran in chennai

சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணியாற்றி வருபவர் மணிமாறன். அவரது மகன் ராஜேஷ் (வயது26),  அவர் தனது நண்பர்கள் இருவருடன் மணிமாறனை பார்ப்பதற்காக உயர்நீதிமன்ற வளாகத்தில் உள்ள வழக்கறிஞர்கள் அறை எண் 219-க்கு சென்றுள்ளார்.

தந்தை மணிமாறனுக்கும், மகன் ராஜேஷ்க்கும் குடும்ப பிரச்சனை காரணமாக திடீரென வாக்குவாதம் முற்றியுள்ளது. அப்போது தான் மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து மணிமாறனின் இடது காது, பின்னந்தலை மற்றும் கன்னத்தில் ராஜேஷ் வெட்டியுள்ளார்.

மணிமாறனின் அலறல் சத்தத்தை கேட்ட சக வழக்கறிஞர்கள், ராஜேஷை அடித்து உதைத்து போலீசில் ஒப்படைத்தனர்

உயர்நீதிமன்ற காவல் நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்ட ராஜேஷ், பின்னர் சென்னை ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

வழக்கறிஞர் மணிமாறன் சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்

உயர்நீதிமன்றம் மத்திய படையின் பாதுகாப்பில் உள்ள நிலையில், அரிவாளுடன் உயர்நீதிமன்ற வாளகத்தில் நுழையும் அளவுக்கு கவனக் குறைவாக இருந்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வழக்கறிஞர்கள் வலியுறுத்தியுள்ளனர்

-ஆர்.மார்ஷல்.