முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாமின் முதலாம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு, 350 கிலோ எடையில் 7 அடி உயரத்தில் வெண்கல சிலை! -மத்திய, மாநில அமைச்சர்கள் மலர் அஞ்சலி.  

kalam statusl2016072786474 f ???????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????? s2016072786471 ?????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????

மறைந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாமின் முதலாம் ஆண்டு நினைவு நாள் நாடு முழுவதும் இன்று (27-07.2016) அனுசரிக்கப்பட்டது. ராமேசுவரம் பேக்கரும்பில் அமைந்துள்ள அப்துல்கலாம் நினைவிடத்தில் அவரது திருவுருவ வெண்கலச்சிலை திறப்பு, மணி மண்டபத்துக்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது.

இதையொட்டி மத்திய மந்திரிகள் வெங்கையா நாயுடு, மனோகர் பாரிக்கர், பொன்.ராதாகிருஷ்ணன், சுபாஷ் ராம்ராவ் பாம்ரே, தமிழக அமைச்சர்கள் நிலோபர் கபில், மணிகண்டன் மற்றும் மாவட்ட கலெக்டர் நடராஜன், அன்வர்ராஜா எம்.பி. ஆகியோர் அங்கு வந்தனர். அவர்கள் அப்துல் கலாமின் நினைவிடத்தில் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். அதன் பிறகு சிலை திறப்பு விழா நடைபெற்றது.

மத்திய மந்திரி வெங்கையாநாயுடு சிலையை திறந்து வைத்தார். மத்திய மந்திரிகள் மனோகர் பாரிக்கர், பொன்.ராதா கிருஷ்ணன், சுபாஷ் ராம் ராவ் பாம்ரே, தமிழக அமைச்சர்கள் நிலோபர் கபீல், மணிகண்டன் ஆகியோரும் இதில் பங்கேற்றனர்.

தொடர்ந்து அருங்காட்சியகம், மணி மண்டபம், அறிவுசார் மையம் போன்றவை அமைக்க அடிக்கல் நாட்டப்பட்டது. அதற்கான கல்வெட்டை மத்திய மந்திரிகள் திறந்து வைத்தனர்.

இந்த நிகழ்ச்சியில் தமிழக பா.ஜனதா தலைவர் தமிழிசை சவுந்தர ராஜன், பரமக்குடி எம்.எல்.ஏ. முத்தையா, முன்னாள் சேர்மன் கீர்த்திகா முனியசாமி, தமிழ்நாடு சேமிப்பு கிடங்கு வாரிய முன்னாள் தலைவர் முனியசாமி, அப்துல்கலாமின் மூத்த சகோதரர் முகமது முத்து மீரான் , பேரன் ஷேக் சலீம் மற்றும் குடும்பத்தினர் உள்ளிட்ட திரளானோர் கலந்து கொண்டனர்.
??????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????

மத்திய மந்திரி வெங்கையா நாயுடு ஆங்கிலத்தில் பேசியதை, தமிழக பா.ஜ.க. தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தமிழில் மொழி பெயர்த்தார்.

 -ஆர்.மார்ஷல்.