திருப்பாற்கடல் ஊராட்சிக்கு தூய்மையான கிராம இயக்க விருது.

thirupar kadal

முழு சுகாதார தமிழகம் என்ற தொலைநோக்கு பார்வையின் கீழ், சுற்றுச்சூழல் மற்றும் சுகாதார மேம்பாட்டு நடவடிக்கையில் சிறப்பாக செயல்படும் கிராம ஊராட்சிகளுக்கு, தூய்மையான கிராம இயக்க விருது’ ஆண்டுதோறும் தமிழக அரசால் வழங்கப்படுகிறது.

அதன்படி, 2014-15-ம் ஆண்டுக்கான தூய்மையான கிராம இயக்க விருது, வேலூர் மாவட்டம், வாலாஜா ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட திருப்பாற்கடல் ஊராட்சிக்கு வழங்கப்பட உள்ளது. திருப்பாற்கடல் ஊராட்சிக்கு, விருதுடன் 5 லட்சம் ரூபாய் பரிசுத் தொகையும் வழங்கப்படும்இந்த பரிசுத் தொகையினை, சுகாதார மேம்பாட்டுப் பணிகளை மேற்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளது.

 -எஸ்.திவ்யா.