திருச்சி – கல்லணை சாலையில் சாலை ஓரத்தில் இருந்த மின் கம்பத்தில் கார் மோதி விபத்து.

??????????????????????????
????????????? ?????????????
?????????????

திருச்சி– சர்கார்ப்பாளையம் வழியாக கல்லணை செல்லும் சாலையில்,  கல்லணையிலிருந்து திருச்சி நோக்கி வந்து கொண்டிருந்த கார் ஒன்று ஒட்டக்குடி ‍- கீழமுல்லக்குடி ஊர்களுக்கு இடையில் வந்த போது  எதிரில் அதிவேகமாக வந்து கொண்டிருந்த இருசக்கர வாகனத்தில் மோதாமல் இருப்பதற்காக, காரை இடது பக்கம் திருப்பிய போது, கார் ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து, சாலை ஓரத்தில் இருந்த மின் கம்பத்தை உடைத்துக் கொண்டு முள் புதரில் மோதி நின்றது.

காரை ஓட்டி வந்த கடலூர் மாவட்டம், திட்டக்குடியை சேர்ந்த கார் உரிமையாளரும் அதில் பயணம் செய்த அவரின் மனைவி மற்றும் 10 வயது மகனும் காயம் இன்றி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்கள்.

விபத்து நடந்த இடத்திற்கு அருகில் இருந்த நாம், உடனடியாக மின் வாரிய அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தோம். சம்பவ இடத்திற்கு வந்த மின் வாரிய ஊழியர்கள் உடனே  மின் இணைப்பை துண்டித்தனர். இதனால் மிகப்பெரிய மின் விபத்து தவிர்க்கப்பட்டதுஇதுசம்பந்தமாக திருவெறும்பூர் காவல் துறையினர் விசாரித்து வருகின்றனர்.

-டாக்டர் துரைபெஞ்சமின்.

ullatchithagaval@gmail.com