குஜராத் முதல்வராக விஜய் ருபானி பதவியேற்றுக் கொண்டார்.

gujarath cm1 gujarath cm 2 gujarath cm F

2016-08-06 HINDI PR. CM Shapath grahan

குஜராத் மாநில முதலமைச்சராக இருந்த ஆனந்திபென் படேல், கடந்த 1-தேதி தனது பதவியில் இருந்து ராஜினாமா செய்தார்.

இதையடுத்து புதிய முதலமைச்சரை தேர்வு செய்வதற்கான எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் அகமதாபாத்தில் நடைபெற்றது. இதில் பா.ஜ.க. தேசிய தலைவர் அமித் ஷா, மத்திய அமைச்சர் நிதின்கட்காரி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் புதிய முதலமைச்சராக விஜய் ருபானியும், துணை முதலமைச்சராக நிதின் பட்டேலும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இதையடுத்து ஆட்சி அமைப்பதற்கான உரிமையை மாநில ஆளுநர் ஒ.பி.கோலியிடன் கோரினர். அதனையேற்று, பதவியேற்பு விழாவை நடத்திக் கொள்ள ஆளுநர் ஒப்புதல் அளித்தார்.

இதனையடுத்து இன்று (07.08.2016) பிற்பகல் 12.40 மணிக்கு பதவி ஏற்பு விழா நடைபெற்றது. காந்திநகரில் நடைபெற்ற இந்த விழாவில் பா.ஜ.க. தேசிய தலைவர் அமித் ஷா, மூத்த தலைவர் அத்வானி, நிதி அமைச்சர் அருண் ஜெட்லி, மகாராஷ்டிர மாநில முதல் மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். விஜய் ரூபானி மற்றும் அமைச்சர்களுக்கு ஆளுநர்  பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.

 -எஸ்.சதிஸ் சர்மா.