இலங்கையில் கடற்கரைப் பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இயந்திரப் படகுக்கு தீ!

SL NEWS 1 SL NEWS

இலங்கையில் சாய்ந்த மருது அல்அக்ஸா பள்ளிவாசலுக்கு முன்பாகவுள்ள கடற்கரைப் பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மீன்பிடி இயந்திரப் படகு ஒன்று இன்று காலை 11.45 மணியளவில் இனந்தெரியாத நபர்களினால் தீயிட்டு எரிக்கப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து கல்முனை மாநகரசபையின் தீயணைப்பு படையினர் விரைந்து சென்று தீயை அணைத்துள்ளதுடன், படகுக்கு அருகாமையில் இருக்கின்ற மரங்கள் மற்றும் மின்கம்பிகளுக்கு தீ பரவாமல் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.

மேலும், இச்சம்பவம் தொடர்பாக கல்முனை பொலிஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

 -வினித்.