திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் ஒன்றிய அளவில் மாணவர்களுக்கு நடைபெற்ற பொது நுழைவு தேர்வில் முதலிடம் பெற்ற செங்கம் ஒன்றியம் மேல்பென்னாத்தூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மாணவி வே.கலைசெல்வி உண்டி உறைவிடப் பள்ளியில் சேர திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார்.
2016 -2017 கல்வியாண்டில் ஆதி தராவிடர் மற்றும் பழங்குடியினர் மாணவ மாணவியர்களை நற்பெயர் பெற்ற சிறந்த உண்டி உறைவிட பள்ளிகளில் ஆறாம் வகுப்பில் சேர்ந்து தொடர்ந்து பணிரெண்டாம் வகுப்பு பயிலுவிக்கும் திட்டத்திள் கீழ் திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் ஒன்றிய அளவில் ஐந்தாம் வகுப்பபு தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு நடைபெற்ற பொது நுழைவு தேர்வில் முதலிடம் பெற்ற ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி மாணவி வே.கலைசெல்வி உண்டி உறைவிடப் பள்ளியான மகரிஷி மேல்நிலைப் பள்ளயில் சேர மாவட்ட ஆட்சி தலைவர் (பொறுப்பு) ச.பழனி ஆணையின் படியும், மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் ராஜேந்திரன் வழிகாட்டுதலின் பேரில், மகரிஷி மேல்நிலைப் பள்ளியின் தாளாளர் சி.மனோகரன் மற்றும் உதவி தொடக்க கல்வி அலுவலர் ச.லோகநாயகி முன்னிலையில் சேர்க்கை நடைபெற்றது.
ஆறாம் வகுப்பு முதல் பணிரெண்டாம் வகுப்பு வரை பயில மொத்த செலவினம் முழுவதும் தமிழக அரசே ஏற்றுகொள்ள வழிவகை செய்து அரசு உத்தரவு பிறப்பிக்கபட்டுள்ளது என்பது குறிப்பிடதக்கது.
நிகழ்ச்சியில் மேல்பென்னாத்தூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் இரா.ஜெயந்தி, பள்ளி ஆசிரியர் ச.நாரயணன் மற்றும் கலைசெல்வியின் பெற்றோர் வேலு, சின்னபாப்பா ஆகியோர் உடனிருந்தனர்.
-செங்கம் மா.சரவணக்குமார்.