பீகாரில் ஏப்ரல் 1–ந் தேதியில் இருந்து, முழு மதுவிலக்கு அமல்படுத்தப்பட்டது.
இந்நிலையில் பீகார் மாநிலம் கோபால்கஞ்ச் மாவட்டத்தில் கடந்த இரு தினங்களுக்கு முன் 16 பேர் மர்மமான முறையில் இறந்தனர். உடல் நிலை பாதிக்கப்பட்ட மேலும் சிலர் மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டனர். கள்ளச்சாராயம் குடித்ததால் அவர்கள் இறந்ததாக தற்போது தெரிய வந்துள்ளது.
மேலும், கள்ளச்சாராயம் குடித்ததால் 4 பேர்களின் கண்கள் பாதிக்கப்பட்டு உள்ளது. அவர்களுக்கு கண் பரிசோதனை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.
இவ்விவகாரம் தொடர்பாக 14 பேர் மீது வழக்குப்பதிவு செய்து 6 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். மேலும், 25 போலீசார் சஸ்பெண்ட் செய்யப்பட்டு உள்ளனர்.
புதிய மதுபான சட்டத்தின் கீழ் குற்றவாளிகள் கடுமையாக தண்டிக்கப்படுவார்கள் என்று பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமார் கூறி உள்ளார்.
-எஸ்.சதிஸ் சர்மா.