ரியோ ஒலிம்பிக்கில் பெண்களுக்கான பேட்மிண்டன் இறுதி போட்டியில் இந்திய வீராங்கனை சிந்துவும், ஸ்பெயின் வீராங்கனை கரோலினா மரினாவும் மோதினர். இதில் சிறப்பாக செயல்பட்டும் நூலிழையில் தங்கப்பதக்கம் பறிபோனது. ஆனாலும், சிந்து வெள்ளிப்பதக்கம் பெற்று சாதனை படைத்தார்.
வெள்ளிப்பதக்கம் வென்றுள்ள சிந்துவுக்கு ரூ.2 கோடி பரிசு வழங்க உள்ளதாக டில்லி அரசு அறிவித்துள்ளது. தெலுங்கான அரசு 1 கோடி ரூபாய் பரிசு அறிவித்துள்ளது.
-ஆர்.மார்ஷல்.